பங்கமாக கலாய்த்த நண்பர்கள்.. அப்செட்டான நடிகை.. இயக்குநர் மேல கொலை காண்டுல இருக்காராம்!
சென்னை: சமீபத்தில் வந்த அந்த நடிகையின் பேய் டீசரில் நடிகையை பார்த்தால் பயம் வராமல் சிரிப்பு தான் வருகிறது என அவரது நண்பர்களே ஒரே ஓட்டாக ஓட்ட ஆரம்பித்தது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.
மேலும், அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் உங்களை புக் பண்றாங்களே ஏன்? என்றும் நீங்களும் ஓகே சொல்லி நடிக்கிறீங்களே என படு மோசமாக ட்ரோல் செய்துள்ளனர் சில நெட்டிசன்கள்.
படத்தில் நடிகை நடித்த சிறந்த காட்சிகளில் ஒரு சில சாம்பிள் கூட டீசரில் இல்லாமல், மோசமான மேக்கப்பில் வரும் பேய் பொம்மை போல இருப்பதை மட்டுமே இயக்குநர் காட்டியதால் அவர் மீது கொலை காண்டுல இருக்காராம் அந்த நடிகை.

முன்னுக்கு வர முடியல
நல்ல நடிகையாக பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், முன்னணி நடிகையாக முன்னுக்கு வர முடியவில்லையே என்கிற ஏக்கம் அந்த நடிகைக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அவரும் பல முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பார்த்தாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதால் ரொம்பவே வருத்தமடைந்துள்ளார்.

விடா முயற்சி
ஆனாலும், நல்ல நடிகை என்கிற பெயரை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் விடா முயற்சியாக உள்ளார் அந்த நடிகை. வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், போல்டான நடிப்பையும் விரும்பி செய்து வரும் அவருக்கு அவர் அப்படிப்பட்ட நடிகை மட்டும் தான் என முத்திரையை குத்தியது தான் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

ரொம்பவே நம்பிக்கை
ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது என்றும் விருதுகள் குவியும் நடிப்பை கொடுத்துள்ளோம் என ரொம்பவே நம்பிக்கையுடன் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் நடிகை. அதற்காக, இயக்குநர் கேட்டதற்கெல்லாம் பிடித்தும் பிடிக்காமலும் ஓகே சொல்லி கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.

நண்பர்கள் கலாய்
இந்நிலையில், சமீபத்தில் வெளியான டீசரை பார்த்த நடிகையின் சில நண்பர்கள் டீசர் கட்ஸ் நல்லா இருக்கு.. ஆனால், உன்னை பார்த்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது என ஒரே பங்கமாக கலாய்த்து உள்ளனர். மேலும், அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மட்டுமே உங்களை ஏன் அழைக்கின்றனர் என்றும் கேட்டு எல்லை மீறி உள்ளனர்.

கொலகாண்டுல நடிகை
நடிகைக்கும் தனது காட்சிகளை பார்த்து விட்டு பிடிக்கவில்லையாம். மேலும், நடிகையின் நெருங்கிய நண்பர்களே கலாய்த்ததும் இயக்குநர் ஏன் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்துத் தன்னை டேமேஜ் செய்து விட்டார் என அவர் மீது கொலகாண்டுல இருப்பதாக காத்துவாக்குல செய்திகள் கோடம்பாக்கம் முழுவதும் பரவி வருகிறது.

படம் வந்தால் தெரியும்
ஆனால், தனது நண்பர்களிடம் படம் வரட்டும் உங்களுக்கே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன் என்பது புரியும். சில சஸ்பென்ஸ் காரணமாக முக்கியமான விஷயங்களை இயக்குநர் காட்டாமல் இருந்திருக்கலாம் என்றும் சமாளித்து பேசி அனுப்பி விட்டதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











