கிளாமரா இல்லை.. ஹீரோயின் சான்ஸ் கொடுக்காத ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் கடும் விரக்தியில் ஜில் நடிகை!
சென்னை: பெயரிலேயே ஜில்லென இருந்தாலும் நடிகை இப்போதைக்கு ரொம்பவே சூடாக இருந்து வருகிறாராம். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் வெளியான அடுத்த அடுத்த படங்கள் படு தோல்வியை சந்தித்ததே காரணம் என்கின்றனர்.
புதிய கதைகளை தேர்வு செய்து நல்ல நடிப்பைக் கொடுத்து வரும் அந்த நடிகை ஆரம்பத்தில் முன்னணி இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று வந்தார்.
ஆனால், சமீப காலமாக கிளாமராக நடிக்க மாட்டீங்க என்றும் கலர் கம்மி என்றும் ஹீரோயின் வாய்ப்பு அந்த நடிகைக்கு பெருமளவில் மறுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

நடிப்பு ராட்சஷி
நடிகர்களுக்கு இணையாக நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தி வரும் அந்த நடிகைக்கா இப்படியொரு நிலைமை என அதே கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. டாப் ஹீரோயினாக தனது திறமையை வைத்து வலம் வர வேண்டிய அந்த நடிகைக்கு எந்தவொரு முன்னணி நடிகர்களும் பட வாய்ப்பை தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிளாமரா இல்லை
கதையம்சம் கொண்ட கதைகள் வருவதே அரிதாக உள்ளது என்றும் அப்படியே வந்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஹீரோயின்கள் காட்சிப் பொருளாகவே நடிக்க வேண்டிய நிலை இருப்பதால் அந்த நடிகைக்கு யாருமே வாய்ப்பு தர முடியாத சூழல் உள்ளதாக நெருங்கிய நண்பர்களும் கை விரித்து வருகின்றனர்.

சோலோ படமும் சொதப்பல்
எப்படியாவது தனது நடிப்புத் திறமையால் பெயர் வாங்கி சினிமாவில் டாப் நடிகையாக வர வேண்டும் என கடின உழைப்புகளை தொடர்ந்து அந்த ஜில் நடிகை போட்டு வருகிறார். ஆனால், அவரது போதாத காலம் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஃபிளாப் ஆகி வருகின்றன. பாராட்டு கிடைத்தால் கூட படம் பார்க்க தியேட்டருக்கு யாரும் வர மாட்டேன் என்கின்றனர் என்பது தான் காலக் கொடுமை.

அப்செட் விரக்தியில் நடிகை
பெரிய நடிகர்களுடன் ஆரம்பத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில், சமீப காலமாக அந்த கதவு முற்றிலுமாக அடைக்கப்பட்டு விட்டதே என்கிற பெரிய மன வருத்தத்தில் நடிகை உள்ளார் என்றும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக மாறாத நிலையில், கடும் விரக்தி அடைந்து விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கன்டென்ட் இல்லா படங்கள் ஓடுது
கதையும் இல்லாமல் நல்ல கன்டென்ட்டும் இல்லாத படங்கள் எல்லாம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகிறது. ஆனால், நம்ம கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக சூஸ் செய்து நடித்தாலும் இப்படி தியேட்டரில் ஈயாடுதே என அப்செட் ஆகி உள்ளாராம் நடிகை. எப்படியாவது மீண்டும் முன்னணி இளம் நடிகர்கள் படத்தில் ஜோடி போட்டு விட வேண்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்ட நடிகை சில நடிகர்களுக்கு தூது அனுப்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











