நம்பர் நடிகையை பார்த்து நடிச்சா அப்படித்தான் நடிப்பேன்னு சீன் போட்ட ஜில் நடிகை.. இப்போ ஆளே காணோம்?
சென்னை: சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்தாலே போதும் அவர்கள் உச்சத்துக்கு சென்று விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால், நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர்களின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருவதும், நடிப்பே என்னான்னு தெரியாத நடிகர்களுக்கு திடீரென படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆவதும் தான் சினிமாவின் மேஜிக்காக உள்ளது.
மக்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்தான் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டாரே கண்டு வியப்பவர் படங்கள் எல்லாம் ஃபிளாப் ஆகிப்போன கதைகளை ரசிகர்கள் கண்முன்னே பார்த்துள்ளனர். அந்த வரிசையில், ஜில் நடிகைக்கு மிகப்பெரிய அடி விழுந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

நம்பர் நடிகை பல வருடங்களாக ஹீரோயினாக அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை சேர்த்த பின்னர், சோலோ ஹீரோயினாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். அவருக்கே பல படங்கள் பெரிதாக கை கொடுக்காத நிலையில், வந்த வேகத்திலேயே ஜில் நடிகை தானும் அப்படித்தான் நடிப்பேன் என அடம்பிடித்த நிலையில், அதே வேகத்தில் ஆளே காணாமல் போய்விட்டார் என்கின்றனர்.
நம்பர் நடிகையை போலவே: நடிச்சா ஹீரோதான்னு ஒரு காமெடி வருமே அதே போல நடிச்சா சோலோ ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றும் ஹீரோக்களுடன் டூயட் பாடும் சீனெல்லாம் தனக்கு செட்டே ஆகாது என ஓவர் சீன் போட்ட நடிகையை நம்பி சில தயாரிப்பாளர்கள் அவரை லீடு ரோலில் நடிக்க வைத்தனர். ஜில் நடிகை வரிசையாக மியூசிக் ஹீரோக்களையே மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து படங்களாக ரிலீஸ் செய்து தள்ள அவரது அதே நடிப்பை மீண்டும் மீண்டும் பார்க்க முடியுமா என ரசிகர்கள் அவாய்ட் பண்ண பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கெல்லாம் தலையில் துண்டு தானாம்.
ஹீரோக்களின் பாலிசி: வருஷத்துக்கு ஒரு படம் அல்லது அதிகபட்சம் 2 படங்கள் மட்டும் செய்தால் தான் தன்னுடைய ரசிகர்கள் பணத்தை சேர்த்து வைத்து தங்கள் படங்கள் வரும் போது ஒட்டுமொத்தமாக குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து படத்தை பார்ப்பார்கள் என்பதை தெளிவாக டாப் ஹீரோக்கள் புரிந்து வைத்துக் கொண்டு தான் படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சில ஆர்வக்கோளாறு நடிகர்கள் போல வாரத்துக்கு ஒரு படம் வெளியிட்டால், ரசிகர்கள் எப்படி தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் என்பதை கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த நடிகையும் சிக்கிக் கொண்டார்.
துரத்திவிட்ட கோலிவுட்: தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், கோலிவுட் தயாரிப்பாளர்கள் அந்த நடிகையா அய்யோ வேண்டாம்ப்பா சாமி என ஒரே கும்பிடாக போட அடுத்து அந்த நடிகையை யாருமே புக் செய்யாத நிலையில், பக்கத்து ஸ்டேட் பக்கம் தாவ நினைத்த நடிகைக்கு அங்கேயும் ஒரு சில படங்களை தவிர பெரிதாக எதுவுமே கிடைக்கவில்லையாம். தங்க முட்டை போடுற வாத்தை வயித்த அறுத்த மாதிரி ஓவர் சீன் போட்ட நடிகைக்கு இப்போ ஒண்ணுமில்லாமல், ஓரங்கட்டுப்பட்டு விட்டதால் மனமே புண்ணாப்போச்சு என்கின்றனர்.
ரியாலிட்டி ஷோ: ஏதாவது ஒரு ரியாலிட்டி ஷோக்கு செல்லலாமா? அல்லது ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கலாமா என்கிற அளவுக்கு நடிகை அதிரடியாக முடிவெடுத்து விட்டார் என்றும் நம்பர் நடிகையை போல ஆக ஆசைப்பட்ட நடிகைக்கு அவரை போல எல்லாம் ஆவது ரொம்ப கஷ்டம் என்பது இப்போது புரிந்திருக்கும் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











