தன்னோட கதையை தாராளமாக எடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் இயக்குநர்.. இந்த முறையாவது அது நடக்குமா?

By Staff

சென்னை: டாப் நடிகருக்கு தன்னோட கதையை சொல்லி சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க நினைத்த இயக்குநர் மரண கிணற்றில் மாட்டிக் கொண்டது போல தன்னுடைய கதையை படமாக்க பல வருடங்களாக போராடி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்காதா என இளம் இயக்குநர்கள் முயற்சி செய்து அந்த இலக்கை அடைந்து விட்டதன் பிறகு ஏன் தான் இங்கே வந்து இப்படி மாட்டிக் கொண்டோமோ என நினைக்கும் அளவுக்கு அவரது சுயம் கெட்டுப் போய்விடுவதாக கூறப்படுகிறது.

தனது கதையை சொல்லி ஓகே செய்த நிலையில், அந்த நடிகருக்காக இரண்டு படங்களை முடித்துக் கொடுத்த பின்னரே தனது கதையை இயக்க நேரம் கிடைத்திருக்கிறதாம் அந்த இயக்குநருக்கு..

ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

டாப் நடிகருக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்ததும் தனது பாணியில் வித்தியாசமான ஒரு கதையை சொல்லி அவரை நடிக்க வைக்கப் போகிறோம் என ஆசை ஆசையாக இருந்த அந்த இயக்குநரை முதலில் நான் சொல்றதை கேளுங்க.. தயாரிப்பாளர் ஆசைக்காக ஒரு படம் என் ஆசைக்காக ஒரு படத்தை எடுத்துக் கொடுங்க.. அப்புறம் உங்களோட படத்தை பண்ணலாம் என அதிரடியாக கூறிவிட்டாராம்.

கரும்புத் தின்னக் கூலி

கரும்புத் தின்னக் கூலி

அந்த இயக்குநரும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கேட்க சென்ற இடத்தில் 3 கிடைக்கிறதே என கரும்புத் தின்னக் கூலி வேண்டுமா? என்கிற ரீதியில் அப்படியே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டதன் விளைவு தான் தற்போது இப்படி ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு மாறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இவருக்கு இதுதான் செட்டாகும்

இவருக்கு இதுதான் செட்டாகும்

அந்த டாப் நடிகருக்கு பாச கதைகள் எல்லாம் செட்டாகாது என நினைத்த அந்த இயக்குநர் டார்க் ஷேட் கதாபாத்திரத்துடன் ஒரு செம ஸ்க்ரிப்ட்டை கொடுத்துள்ளார். ஆனால், தனக்கு பிடித்தமான படங்களை முதலில் இயக்குங்கள் என இயக்குநரை அந்த டாப் நடிகர் தான் இப்படி திசை திருப்பி இரு படங்களை எடுக்க வைத்துள்ளார் என திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர்.

அப்படி சொன்னாரே

அப்படி சொன்னாரே

அந்த நடிகர் முழுசா கதையே கேட்க மாட்டார் என இயக்குநர் செம பில்டப் கொடுத்த நிலையில், இவருடைய கதையையே படமாக எடுக்க விடாமல் அவர் சொன்ன கதையைத் தான் இயக்குநர் எடுத்ததாகவே தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழ என்ன காரணம் என்றே புரியாமல் பலரும் புலம்பி வருகின்றனராம்.

தலையிட மாட்டாரா

தலையிட மாட்டாரா

தனது கதையை படமாக்க அந்த இயக்குநர் தனக்கு கொடுத்த இரு அசைன்மென்ட்டுகளையும் முடித்துக் கொடுத்த நிலையில், அடுத்த படத்திலாவது நடிகரின் தலையிடுதல் அதிகமாக இருக்காது என நினைத்த நிலையில், ஏகப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளையும், குடும்ப ரசிகர்களை கவரும் விதமாகவும் கதையை கொஞ்ச மாஸ் மசாலா கலந்தபடி மாற்ற சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இயக்குநர் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X