படப்பிடிப்பு முக்கியமல்ல பார்ட்டி தான் முக்கியம்.. நடிகைகளுடன் உல்லாசமாக இருக்கும் உயரமான நடிகர்!

By Staff

சென்னை: சினிமாவுக்கு நாம சின்சியராக இல்லை என்றால், சினிமா நமக்கு சின்சியராக இருக்காது என்பதற்கு ஏகப்பட்ட நடிகர்கள் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனதில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.

சமீப காலமாக அந்த உயரமான நடிகர் நடிக்கும் படங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காமல் படு தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், முறையாக படப்பிடிப்புக்கும் செல்லாமல் நடிகைகளுடன் பிரைவேட் பார்ட்டி செய்து வருகிறார் என ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

ஒரே மாதிரி

ஒரே மாதிரி

ஆரம்பத்தில் வித்தியாசம் காட்டி நடிப்பில் அசத்தி வந்த அந்த நடிகரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. ஒரே மாதிரியான ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு முற்றிலும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஓவர் டேக் பண்ணிட்டாங்க

ஓவர் டேக் பண்ணிட்டாங்க

மாஸ் நடிகருக்கு கிடைத்த பட்டப் பெயரை போலவே இவருக்கும் பட்டப்பெயர் எல்லாம் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக அந்த நடிகர் இழந்து விட்டார். இந்த கேப்பில் சில இளம் நடிகர்கள் சத்தமே இல்லாமல் கடுமையாக உழைத்து ஓவர்டேக் பண்ணிட்டு எங்கேயோ முன்னேறி விட்டனர்.

லிஸ்ட்லயே கிடையாது

லிஸ்ட்லயே கிடையாது

டாப் நடிகர்கள் பட்டியலில் தற்போது அந்த நடிகருக்கு முதல் 10 இடங்களில் கூட இடமே இல்லாத அளவுக்கு பல படி பின்னுக்கு சென்றுள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என நடித்து இம்சை செய்து வரும் அந்த நடிகர், அந்த சினிமா தொழிலை கூட சின்சியராக செய்யவில்லை என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை

படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை

வம்பு நடிகர் முன்னர் செய்து வந்த அதே தவறை தற்போது இந்த உயரமான நடிகரும் அடம்பிடித்து செய்து வருகிறாராம். ஏற்கனவே நடித்த படங்கள் தான் தோல்வியை தழுவின. அடுத்தடுத்த படங்களில் ஆவது முழுமையான கவனத்தை செலுத்தி கடுமையான உழைப்பை போட்டு நடித்தால் வெற்றி பெறலாம் என்கிற எண்ணமே இவருக்கு இல்லை என தயாரிப்பாளர்களே புலம்பி வருகின்றனர்.

நடிகைகளுடன் பார்ட்டி

நடிகைகளுடன் பார்ட்டி

சில நாட்கள் ஷூட்டிங் வருவதும், சில நாட்கள் ஷூட்டிங் வராமல் படத்தில் நடிக்கும் சக நடிகைகளை அழைத்துக் கொண்டு பிரைவேட் பார்ட்டி செய்வதுமாக மஜா பண்ணி வருகிறாராம் அந்த உயர்ந்த நடிகர் என வெளியாகி உள்ள ஷாக்கிங் தகவல்கள் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே பல பிரச்சனைகள் அவரை சுற்றி உள்ள நிலையில், இதுபோன்ற பிரச்சனையில் சிக்குவது அவருக்கு மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கும் என்றும் நண்பர்கள் அட்வைஸ் செய்து வந்தாலும், அதை எல்லாம் கேட்கும் நிலையிலேயே அந்த நடிகர் இல்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X