கோடிக்கணக்கில் பணம் இருந்தும்.. கடனை அடைக்க மறுக்கும் நடிகர்.. ஆளு மட்டும் வளர்ந்தா போதுமா?

By Staff

சென்னை: எத்தனை படங்கள் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த படங்களை பண்ணிக் கொண்டு இருக்கும் அந்த உயர்ந்த மனிதன் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய கடனை மட்டும் இன்னும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறாராம்.

வாங்கிய காசை திருப்பித் தர சொன்னால், அதெல்லாம் முடியாது, அதுதான் கோர்ட்டுக்கு போயிட்டீங்களே அங்கேயே வாங்கிக்கோ என வாய் சவடாலாக பேசி வருவதாக கோடம்பாக்கத்தில் அதிர்ச்சிகரமான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Tall actor avoids to return his debt to Big Production for this reason?

அரசியல், பஞ்சாயத்து என ஏகப்பட்ட விஷயங்களில் தேவையில்லாமல் தலையை விட்டுக் கொண்டு முன்பை போல சிறப்பான நடிப்பைக் கூட அந்த நடிகரால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

பல கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் அந்த நடிகருக்கு இந்த தொகை எல்லாம் பெரிய விஷயமே கிடையாது என்றும் அந்த பணத்தைக் கொடுத்து விட்டு அடுத்தடுத்து தனது படங்களை சிக்கல் இல்லாமல் வெளியிடலாமே என்றும் சினிமா பிரபலங்களே சிலர் பேசி வருகின்றனர்.

தனது தயாரிப்பு நிறுவனத்தில் படத்தை எடுத்தால் தானே தடுப்பார்கள் என்பதால் தான் நைஸாக தனது பினாமியாக நண்பர்களை தயாரிப்பாளர்களாக மாற்றி புதிய படங்களை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார் அந்த நடிகர் என்றும் அதன் காரணமாகத் தான் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு பணத்தை திருப்பி தர முடியாது, என்ன வேண்டுமானால் செய்துக் கொள்ளட்டும் என்கிற முடிவில் நடிகர் தொடர்ந்து அலைகழித்து வருகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tall actor avoids to return his debt to Big Production for this reason?

உயரமான ஆளாக இருந்தாலும், உள்ளம் உயர்வாக இல்லையே என சினிமா பிரபலங்களே கோடம்பாக்கத்தில் பேசி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும், அடுத்தவரை ஏமாற்றினால் ஏமாந்து தான் போவார் என்றும் அதன் காரணமாகவே அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்து வருகிறது என தயாரிப்பு தரப்பில் இருந்து ஏகப்பட்ட சாபங்களே குவிந்து வருகின்றன.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது பேச்சை மதிக்காமல் வழக்குப் போட்ட அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நயா பைசாக் கூட தரப்போவதில்லை என்பதில் ரொம்பவே நடிகர் உறுதியாக உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த விஷயம் எங்கே சென்று முடியப் போகுதோ தெரியவில்லை என்றும் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் ஏகப்பட்ட இயக்குநர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த நடிகருடன் எந்தவொரு படத்தையும் பண்ண வேண்டாம் என்றே ஆர்டர் போட்டு வருவதாகவும், அதற்கு பதிலாக தங்கள் பேனர்களில் புதிய படங்களை பண்ணலாம் என்றும் வலை விரித்து வருகிறது என்றும் கூறுகின்றனர்.

Tall actor avoids to return his debt to Big Production for this reason?

இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமரசமாக பேசினாலே தீர்ந்து விடும் என்றும் அதற்கு இரு தரப்பும் முயற்சிக்கவே இல்லாமல் முட்டிக் கொண்டு வருவது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கிற பேச்சுக்களும் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X