ஆத்தி.. முன்னாள் காதலியுடன் உயர்ந்த மனிதன் மிட் நைட்டில் ரகசிய சந்திப்பு.. தீயாய் பரவும் தகவல்!

By Staff

சென்னை: கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகை உடன் தீவிர காதலில் இருந்து வந்த அந்த உயரமான நடிகர் தொழிலதிபர் பெண்ணை மணக்கும் யோகம் அடித்த நிலையில், நடிகையை நைசாக கழட்டி விட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுக்கள் அடிபட்டன.

அதன் பின்னர், அந்த நடிகை சினிமாவில் இருந்தே அப்படியே சில ஆண்டுகள் சைலன்ட்டாக ஒதுங்கிய நிலையில், அவரது மார்க்கெட் டோட்டலாக காலியானது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக அந்த நடிகையை ரகசியமாக உயர்ந்த மனிதன் சந்தித்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Tall actor recently met his ex girfriend secretly at night talks trending in Kollywood

உச்சகட்டமாக சென்ற காதல்: உயர்ந்த மனிதருடன் அந்த மங்களகரமான நடிகை தொடர்ந்து நடித்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாம். இருவரும் ஒரே வீட்டில் பல நாட்களை கழித்து வந்த நிலையில், அந்த நடிகையைத் தான் உயர்ந்த மனிதன் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன.

நடிகையும் தனக்கு ஒரு நல்ல துணை கிடைத்து விட்டது என மற்ற நடிகர்களின் படங்களை தவிர்த்து விட்டு அந்த நடிகருடனே தொடர்ந்து நடித்த நிலையில், படங்கள் பெரிதாக ஓடாமல் ஃபிளாப் ஹீரோயினாக மாறினார்.

பெரிய இடம் கிடைத்த உடன்: அந்த நடிகையை அவர் திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த நடிகையை அப்படியே கழட்டி விட்டு விட்டாராம் அந்த நடிகர்.

ஏற்கனவே இன்னொரு நடிகையுடனும் அப்படித்தான் காதலிப்பது போல பழகி எல்லா விஷயங்களும் முடிந்த நிலையில், அந்த நடிகையை கழட்டி விட்ட நடிகர் இந்த நடிகைக்கும் அதே துரோகத்தை செய்து விட்டார்.

ஆனால், அது நடக்கவில்லை: நடிகையை கழட்டி விட்டு தொழிலதிபர் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள நினைத்த நடிகரின் கனவு பலனளிக்கவில்லை. தனக்கும் அந்த நடிகருக்கும் இடையேயான ரகசிய உறவை அந்த பெண்ணிடமே நடிகை நேரில் சென்று சொன்ன நிலையில், தான் திருமணம் நின்று போனது என்கிற ஷாக்கிங் தகவல்களும் லீக் ஆகி உள்ளன.

அந்த விவகாரம் தெரிந்த நிலையில், நடிகை உடன் கடும் சண்டை போட்டு விட்டு அதன் பின்னர் நடிகையை சந்திப்பதையே விட்டு விட்டாராம் அந்த நடிகர்.

Tall actor recently met his ex girfriend secretly at night talks trending in Kollywood

மீண்டும் முளைத்த காதல்: இந்நிலையில், சமீபத்தில் நடிகையை பார்ட்டி ஒன்றில் சந்தித்த நடிகர் அப்படியே தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்றதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

நடிகைக்கும் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அந்த நடிகருடன் மீண்டும் ஜோடி சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவருக்கும் இடையே உருவாகி உள்ள இந்த நட்பு மீண்டும் காதலை நோக்கி நகருமா? அல்லது சினிமா படங்கள் அளவுக்குள் நின்றுவிடுமா என்பது விரைவில் தெரிந்து விடும் என கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

நடிகைக்கும் மீண்டும் ஒரு சில பெரிய படங்கள் அமைய காரணமே அந்த உயர்ந்த மனிதன் தான் என்றும் யாருமே தனக்கு செட்டாகாத நிலையில், அந்த நடிகையையே திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X