பாம்பு என பட்டப்பெயர் வைத்து கிண்டல் பண்றாங்க.. மனசு புண்பட்டுக் கிடக்குது.. ஹைட்டான ஹீரோ வேதனை!
சென்னை: ஏகப்பட்ட சீன் போட்டு நடித்தாலும் கடைசியில் அந்த நடிகரை சீன் நடிகராக மட்டுமே ரசிகர்கள் பார்ப்பதாகவும் அவரது படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கும் ஆர்வத்தை மக்கள் முற்றிலுமாக குறைத்துக் கொண்டனர்.
அந்த வேதனை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவருக்கு வைக்கப்பட்டு இருக்கும் அந்த பட்டப் பெயர் தான் அவரை தூங்க கூட விடாமல் போட்டு டார்ச்சர் செய்து வருகிறதாம்.
அந்த கவர்ச்சி நடிகை பண்ண வேலையால் தான் இப்படியொரு அவப்பெயருக்கு தான் ஆளாகி உள்ளோம் என்பதை நினைத்து தனது நண்பருடன் நடிகர் புலம்பி அழுததாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

எல்லாமே ஃபிளாப்: நடிகர் சமீப காலமாக நடித்து வரும் அனைத்து படங்களும் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. நடிகர் என்ன தான் கஷ்டப்பட்டு அடிவாங்கி, மிதி வாங்கி நடித்தாலும், அவர் செய்த சில வேலைகள் குறித்த தகவல்கள் வெளியே லீக் ஆகி அவரது இமேஜை டேமேஜ் செய்த நிலையில், அவர் நடிக்கும் படங்களை பார்க்க மக்கள் பெரிதாக ஆர்வம் செலுத்துவதில்லை என்கின்றனர்.
நடிகை சொன்ன மேட்டர்: கவர்ச்சி நடிகை ஒருவர் ஹைட்டான ஹீரோ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டனர் என்றும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை மோசம் செய்து காரியத்தை முடித்துக் கொண்டனர் என்றும் வெளிப்படையாக சொன்ன மேட்டர் மிகப்பெரிய பஞ்சாயத்தைக் கூட்டியது.
மேலும், நடிகர் பற்றி அவர் சொன்ன அந்த விஷயம் தான் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் அந்த நடிகரை அந்த வார்த்தையை வைத்து ஓட்டுவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்கின்றனர்.

பாம்பு பட்டப் பெயர்: சமீப காலமாக அந்த நடிகர் குறித்து சோஷியல் மீடியாவில் மரண பங்கமாக மீம்கள் பறக்கின்றன. மேலும், ஏகப்பட்ட ட்ரோல்களும் நடிகரின் அந்த பாம்பு பட்டப் பெயரை வைத்தே பறக்கின்றன.
இந்த விவகாரம் அடிக்கடி நடிகரின் கண்ணில் பட்டு வரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட் செட்டில் கூட சிலர் அந்த பட்டப் பெயரை வைத்தே வேடிக்கையாக நடிகரை மறைமுகமாக கிண்டல் செய்து வருவதை அறிந்து அவர் மனம் ரொம்பவே புண்பட்டு இருப்பதாக தனது நண்பர் ஒருவருடன் புலம்பி உள்ளாராம்.
நடிகர் புலம்பல்: வேண்டுமென்றே தனது பெயரை அந்த நடிகை நாரடித்து விட்டார் என்றும் அதிகமாக இப்படி அந்த பட்டப் பெயரை வைத்து ட்ரோல் செய்து வருவது மனசுக்கு ரொம்பவே பாரமாக உள்ளது என்றும் சினிமாவை விட்டு விட்டு எங்கேயாவது அமைதியாக சென்று விடலாம் என்றே தோன்றுவதாக ரொம்பவே அப்செட் ஆகி நடிகர் பேசி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











