சர்ச்சை நடிகையை பற்றி கேட்டதும் பொசுக்கென்று கோப்பட்ட உயர்ந்த நடிகை
Recommended Video

சென்னை: சர்ச்சை நடிகையை பற்றி கேட்டபோது உயர்ந்த நடிகைக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிட்டதாம்.
சர்ச்சை நடிகையும் சரி, உயர்ந்த நடிகையும் சரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஹீரோக்களுக்காக மட்டும் கொள்கையை தளர்த்தி மரத்தை சுற்றி வந்து காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார்கள்.

அண்மையில் உயர்ந்த நடிகையிடம் சர்ச்சை நடிகை பற்றி செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அவரை உங்களுக்கு போட்டி என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் உயர்ந்த நடிகையிடம் கேட்டுள்ளனர்.
இந்த கேள்வியை கேட்டதும் உயர்ந்த நடிகைக்கு கோபம் வந்துவிட்டதாம். எனக்கு நான் மட்டுமே போட்டி. என்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சும்மா ஒரு கேள்வி கேட்டதற்கு அம்மணிக்கு இப்படி கோபம் வருதே என்று செய்தியாளர்கள் வியந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











