நிகழ்ச்சி தொகுப்பாளினியையும் விட்டு வைக்கவில்லையா சிம்பு? தீயாய் பரவும் வீடியோ காட்சி
சென்னை: இளம் நடிகர் ஒருவர் பெண்ணுக்கு உதட்டோடு உதடாக சேர்த்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வந்தன. தீவிர ஆய்வுக்கு பிறகு அந்த படத்தில் இருப்பது நடிகர் சிலம்பரசன் என்பதும், அந்த பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி என்றும் தெரிய வந்துள்ளது.
நேற்று மாலையில் இருந்து, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டிவிட்டரில், 'அப்படியா..', 'அவரா...', 'அவர் செய்யக் கூடிய ஆள்தான்...' என ஒரு ஹீரோவை பற்றிய டாக்தான் ஓவராக இருந்தது.
ஒரு ஹீரோ நடிகரும், பெண்ணும் உதட்டோடு உதடாக சேர்த்து முத்தமிட்ட காட்சி இணையத்தில் பரவியுள்ளது பற்றிதான் அப்படி இணையத்தில் சூடாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. சிலர் வீடியோவுக்கான லிங்குகளையும் வலைத்தளத்தில் பரப்பி, சமூக கடமையாற்றிய திருப்தியுடன் விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்படி என்னதான் இருக்கிறது அந்த வீடியோவில் என்று நாமும் பார்த்தோம். ஏதோ ஒரு ஹோட்டல் போல காணப்படும் அந்த இடத்தில் இருபுறமும் அறைகள் இருக்க நடுவே கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரு மூலையில் ஒரு ஆணும் பெண்ணும், நின்றபடி உதத்தோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.
சில விநாடிகள் ஓடும், இந்த வீடியோ, ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ காட்சிகளை யாரோ செல்போனில் எடுத்து இணையத்தில் பரவவிட்டுள்ளதை போல உள்ளது. சிசிடி திரையில் ஓடும் காட்சிகளில், வீடியோ எடுக்கப்பட்டது இம்மாதம் 13 என்று தேதி காண்பிக்கிறது.
அந்த காட்சியில் உள்ளது சிலம்பரசனும், தென் இந்திய சினிமா விருது வழங்கும் விழாவின் (சிமா 2014) நிகழ்ச்சி தொகுப்பாளினி என்றும் ஒரே பேச்சாக உள்ளது.
காட்சியில் இருக்கும் நடிகர் சிலம்பரசன்தான் என்று முதலில் இருந்தே அனைவரும் உறுதியாக கூறிவந்தாலும், பெண் விஷயத்தில் மட்டும் குழப்பம் நீடித்து வந்தது. அந்த காட்சியில் தோன்றுவது மூன்றெழுத்து நடிகை என்று முதலில் கிசுகிசுக்கப்பட்டது.
இன்னும் நன்றாக உற்று பார்த்தவர்கள் இவர், அவர் இல்லை என்பதும், கேரள பூர்வீக நடிகை என்றும் கூறினர்.
இறுதியாக, உறுதியாக தற்போது கிடைத்துள்ள தகவல்படி, சிலம்பரசனுடன் இருப்பது சிமா நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று தெரியவந்துள்ளது.
மலேசியாவில் இம்மாதம் நடைபெற்ற சிமா விருது வழங்கும் விழா நிகழ்ச்சிக்கு சிலம்பரசன் சென்றிருந்தார். அப்போதுதான் மலேசிய ஹோட்டலில் இந்த கசமுசா நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த சிசிடிவி காட்சியில் செப்டம்பர் 13ம்தேதி எடுக்கப்பட்ட வீடியோ என்பதற்கான ஆதாரம் உள்ளது. சிமா நிகழ்ச்சியும் அன்றுதான் நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்திய வீடியோவின் உண்மை தன்மை குறித்து இன்னும் சம்மந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.


Click it and Unblock the Notifications











