எல்லை மீறி போன குடிப்பழக்கம்.. மனைவியை நினைத்து கலங்கும் கணவர்.. நடிகர் ஒரு முடிவு எடுத்திருக்காராம்
சென்னை: கோலிவுட்டில் பல பெண்களை கவர்ந்தவர் அந்த நடிகர். பக்கா ப்ளே பாயாக வலம் வந்த அவர் ஒருகட்டத்தில் நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல்தான் இருந்தது. சூழல் இப்படி இருக்க நடிகரின் மனைவிக்கு குடிப்பழக்கம் எல்லை மீறி போய்விட்டதாகவும்; அதனால் நடிகர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
2000களின் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தவர் அந்த நடிகர். அனைத்தையும் அழகாக காண்பிக்கும் ஒருவரின் அறிமுகம். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நடிகரும் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் போல் இருந்ததால் அவருக்கென்று தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் ஏராளமானோர் உருவாகினார்கள். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஹிட்டுகள், தோல்விகள் என மாற்றி மாற்றி ரிசல்ட்டை பெற்றன. ஆனால் நடிகரின் கரியருக்கு எந்தவிதமான ஆபத்தும் வரவில்லை.
ப்ளே பாய்: தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு சீராக முன்னேறிய அவர்; சாக்லேட் பாய் என்று பட்டமும் பெற்றார். சில நடிகர்களின் வரிசையில் அவரை வைத்து ரசிகைகள் கொண்டாடினார்கள். தனக்கு ஏற்பட்ட இமேஜை காப்பாற்றிக்கொள்வதற்கு ஏற்ப சில விஷயங்களிலும் தீவிரமாக இறங்கினார். அவற்றில் ஒன்றுதான் அத்தனை நடிகைகளுடனும் செம ஜாலியாக பழகுவது.

நடிகர் கில்லாடி: நம்பர் நடிகை, உயர நடிகை என பலரும் இவருக்கு நெருக்கமான நட்பில் இருந்தவர்கள். முக்கியமாக ஒரு ஸ்டார் ஹோட்டலில் பட்ட பகலிலேயே உயரமான நடிகையை கையை பிடித்துக்கொண்டு அறைக்கு அவர் அழைத்து சென்றதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள். நடிகரின் செயல்பாடுகளை பார்த்து மற்ற நடிகர்கள் கொஞ்சம் வயிறு எரிந்ததும் உண்டு. அதுமட்டுமின்றி இவருக்கு திருமணமே ஆகாது என்றும் சிலர் சொல்லியதுண்டு.
நடிகையை மணந்த நடிகர்: ஆனால் பெரிய ட்விஸ்ட்டாக இந்த நடிகர் திருமணம் செய்துகொண்டார். தன்னுடன் ஒரு படத்தில் நடித்தபோது சக நடிகையை காதலித்த அவர்; வீட்டு சம்மதம் வாங்கி மணமுடித்தார். ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தனது சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டார். பொறுப்பான குடும்பஸ்தனாக மாறியிருந்தார். இந்நிலையில் அவர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் கிளம்பியிருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது நடிகரின் மனைவிக்கும் குடிப்பழக்கம் இருக்கிறதாம். சமயங்களில் கணவருடனேயே சேர்ந்து அம்மணியும் சரக்கு போடுவாராம். நாட்கள் செல்ல செல்ல நடிகைக்கு இருந்த குடிப்பழக்கம் குறையாமல் அளவுக்கு மீறி சென்றுவிட்டதாம். எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தும் நடிகையை மாற்றவே முடியவில்லை. சில நேரத்தில் குழந்தை இருப்பதையே மறந்துவிட்டு கபாலம் கலங்கும் அளவுக்கு நடிகை குடிக்கிறாராம். இதனால் அப்செட்டான நடிகர் மருத்துவர்களை வீட்டுக்கே வரவழைத்து மனைவி குடியை விடுவதற்கான மருத்துவத்தை பார்க்க வைத்திருக்கிறாராம். அதனால்தான் எந்தப் படத்திலும் இப்போது கமிட்டாகாமல் இருக்கிறாராம். அதுமட்டுமின்றி மனைவி மாறிய பிறகுதான் தொழிலுக்கு வருவது என்ற முடிவையும் எடுத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











