கேரவன் 2.0.. மீண்டும் சேர்ந்த ஜோடி...படப்பிடிப்பில் குடியும், குடித்தனமுமாக அலப்பறை!
இரண்டாம் பாக படப்பிடிப்பில் மீண்டும் கேரவனுக்குள் நடிகையும், நடிகரும் குடித்து விட்டு அலப்பறை கொடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு பிரபலமான நடிகை, மூன்றெழுத்து நடிகர் ஒருவருடன் படப்பிடிப்பு தளத்தில் கேரவனுக்குள் குடித்து விட்டு கும்மாளம் அடித்துள்ளார்.
பத்து படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரத்தையும், ஆதரவையும் ஒரே நிகழ்ச்சி மூலம் மக்களிடம் இருந்து பெற்ற அழகான நடிகை அவர். இரண்டாம் முறை கிடைத்த வாய்ப்பை எப்படியும் தக்க வைத்துக் கொள்வார் எனப் பார்த்தால், இதுவரை அவருடைய ஒரு படமும் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், தனது அறிமுகப் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் நடிகை. நாயகனும் அவரே என்பதால், ஷூட்டிங்கில் கச்சேரி களைகட்டியதாம். நாயகன், நாயகி இருவரும் தங்கள் காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன் கேரவனுக்குள் புகுந்து கொண்டார்களாம். பிறகென்ன குடியும், குடித்தனமுமாக அவர்களது பொழுது போனதாம்.
இவர்களது இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பிற்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை. இதனால் முகம் சுளித்தாலும் கண்டுக்காமல் சென்று விட்டதாம் படக்குழு.
முதல் படத்திலேயே இருவரையும் வைத்து கிசுகிசுக்கள் கிளம்பின. இதனால் சில காலம் பிரிந்திருந்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் இணைந்து விட்டனர் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











