மாட்டிக்கினாரு ஒருத்தரு.. புகைச்சலை கிளப்பிய பார்ட்டி ரேட் விவகாரம்.. உச்சகட்ட மனவேதனையில் நடிகை!
சென்னை: திரையுலகில் தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்றால் நடிகை ஒருவர் குறித்த தகவல்களை தான். நடிகை படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார் எனக் கூறப்பட்டது. முதலில் இந்த தகவல் சிலருக்கு மட்டுமே தெரிந்த நிலையில், நடிகையிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார்கள். நடிகையோ உடனே அதற்கான டாரிஃப்ஃபை எடுத்து நீட்டியுள்ளார். ஆனால் தற்போது நடிகையின் விஷயம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட பலரும் நடிகையின் மானத்தையே வாங்கிவிட்டார்கள். இதனால் நடிகை மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.
நடிகை அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தமிழ் சினிமாவுக்கு வந்தவருக்கு யோகத்தின் மேல் யோகம் பணமழையில் நனைய வைக்கும் இளம் தயாரிப்பாளர் கிடைத்ததால் நடிகைக்கு ஜாக்பாட். தயாரிப்பாளரை வைத்து எந்த அளவுக்கு கறக்க முடியுமோ அந்த அளவுக்கு கறந்து விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார்.

பண ஆசையா: மேலும் தயாரிப்பாளர் தரப்பிலோ நடிகையிடம் யாரிடமும் சொல்லவேண்டாம், அதேபோல் மற்றவர்களுடனும் பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். தொடக்கத்தில் நடிகை கப் சிப் என்று தான் இருந்துள்ளார். ஆனால் விஷயம் எப்படியோ வெளிய தெரிய, நடிகைக்கு தொடக்கத்தில் பகீர் என தான் இருந்ததாம். அதன் பின்னர், நடிகையோ, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என அந்த இளம் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல், மற்றவர்களுடனும் அவர் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
இரவு பார்ட்டி: இப்போது நடிகையின் இரவு பார்ட்டி குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியதால் நடிகைக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். இதனால் மிகவும் மன முடைந்த நடிகை கமிட்டான படங்களுக்கே சில நாட்கள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். மேலும் நடிகைக்கு நெருக்கமானவர்கள் நடிகையை கொஞ்சம் கொஞ்சமாக தேத்தி, மீண்டும் படப்பிடிப்புக்கு அனுப்பியுள்ளார்கள். அதேபோல் படப்பிடிப்புக்கு செல்லும் நடிகையும் முன்பு போல் இல்லாமல், ஷாட் முடிந்ததும் உடனே கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொள்கிறாராம். நடிகையின் இரவு பார்ட்டி விவகாரத்தை யார் வெளியே விட்டார்கள் என்று நடிகை ஒரு புறமும், இரவு பார்ட்டிக்கு செலவாகும் பணம் குறித்த தகவல்கள் எப்படி கசிந்தது என தயாரிப்பாளரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











