தமிழ் சினிமாவுக்கு டாட்டா? ஆந்திராவில் செட்டில் ஆகும் அந்த நிறம் மாறாத நடிகை - என்ன காரணம் தெரியுமா?

By Staff

சென்னை: கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்து போகலாம், ஆனால் நம்ம வீட்டுப் பொண்ணு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அந்த எதார்த்த நடிகைக்கு இப்போது தமிழ் சினிமாவில் ஏனோ ஒரு சின்ன சலிப்பு வந்துவிட்டதாம். ஆரம்பத்தில் நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்று நிறத்தை வைத்து நிராகரிக்கப்பட்ட போதெல்லாம், தனது கடின உழைப்பால் அதே நிறத்தையே தனக்கான அடையாளமாக மாற்றிக் காட்டியவர் அவர். ஆனால், இப்போது அவர் தனது கவனத்தை அப்படியே ஆந்திரா பக்கம் திருப்பியிருப்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.

அந்த நடிகை தமிழில் நடித்த படங்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஆனால், என்னதான் திறமையை நிரூபித்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் சம்பள விஷயத்திலும், முக்கியத்துவத்திலும் முன்னேற்றம் இல்லை என்று நடிகை ஃபீல் செய்கிறாராம். இங்க என்னதான் மாரடிச்சாலும் அதே ரேஞ்சுதான், ஆனா அங்க போனா ராஜ மரியாதை கிடைக்குதே எனத் தனது நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் நடிகை.

tamil actress shaping career in tollywood settling in hyderabad actress gossip

தெலுங்கில் நல்ல வரவேற்பு: ஏற்கனவே தெலுங்கில் அந்த நடிகை நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், இப்போது அங்குள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. முக்கியமாக, தெலுங்கு தேசத்தில் அவருக்குக் கிடைக்கும் சம்பளம் கோலிவுட்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாம். நிறம் முக்கியமில்லை, நடிப்புதான் முக்கியம் என ஆந்திரா ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதைப் பார்த்த அந்த நடிகை, இப்போது ஹைதராபாத்திலேயே ஒரு சொகுசு பங்களா வாங்கி செட்டில் ஆகும் முடிவில் இருக்கிறாராம்.

தமிழுக்கு டாட்டா: அதுமட்டுமில்லாமல், இனிமேல் டப்பிங் கூட தெலுங்குல நானே பேசப்போறேன் என அவர் எடுத்திருக்கும் முடிவு, தமிழ் இயக்குநர்களைக் கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளது. நம்ம ஊர்ல வளர்த்துவிட்ட நடிகை, இப்போ பக்கத்து மாநிலத்துக்கு டாட்டா காட்டிட்டுப் போறாங்களே எனச் சில தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுதான் முடிவு: ஒரேடியாகத் தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட மாட்டார் என்றாலும், இனிமேல் நடிகையின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஒருவேளை தேசிய விருது வாங்கும் ரேஞ்சுக்கு ஏதாவது ஒரு படம் தமிழில் கிடைத்தால் நடிகை மீண்டும் சென்னை பக்கம் திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X