அடுத்தடுத்த சறுக்கல்கள்.. ஒட்டுமொத்த கதை இலாகாவையே கலைத்துப் போட்ட பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் மிகப் பெரும் நஷ்டம், மோசமான கதை என அடுத்தடுத்த கசப்பான சம்பவங்களால் கதை இலாகாவையே காலி செய்துவிட்டது என்பது கோடம்பாக்கம் வட்டாரங்களின் கிசுகிசு தகவல்.
தமிழ் சினிமா உலகில் தொடக்க காலங்களில் பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகா இருக்கும். இந்த கதை இலாகாவிடம் ஒரு கதை சொல்லிவிட்டால் டிஸ்கஷன் செய்து ஸ்கிரிப்ட் ரெடி செய்து தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறும். தமிழ் சினிமாவின் கட்டமைப்புகளில் கதை இலாகா, கதாசிரியர்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்த காலமும் இருந்தது.

ஆனால் ஒருகட்டத்தில் இயக்குநர்களே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஒட்டுமொத்தத்தையும் தங்கள் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தனர். இதனால் கதை இலாகா எனும் டிபார்ட்மெண்ட் காலாவதியாக வேண்டிய கட்டாயம் உருவானது. தயாரிப்பு நிறுவனங்கள் கதை இலாகா என ஒன்றையே மறந்து வெகுதொலைவு பயணித்துவிட்டன.
இந்த நிலையில் தமிழ் சினிமா உலகுக்குள் பிரளயமாய் நுழைந்த வெளிநாட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. ஆனால் சர்ச்சைகளையே சாதனைகளாக்கி தமிழ் சினிமாவின் பிரதான தயாரிப்பு நிறுவனம் என்ற இடத்தைப் பெற்றது.

பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்ததால் மீண்டும் கதை இலாகாவையும் உருவாக்கியது இந்த நிறுவனம். மூவர் கொண்ட கதை இலாகாதான் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் இதயமாகவும் மாறியது. இப்போது இந்த கதை இலாகாவுக்கு ஆகப் பெரும் சோதனை வந்துவிட்டதாம்.
காமெடி நடிகரின் படத்தால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. சரி எப்படியோ சமாளித்துவிடலாம் என தயாரிப்பு நிறுவனம் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் உச்ச நடிகரின் அதிருப்திக்குள்ளானது இந்த நிறுவனம் ஓகே சொன்ன டைக்ரடரின் கதை. அதிலும் ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதனையடுத்தே ஒட்டுமொத்த கதை இலாகாவையுமே தூக்கி அடித்துவிட்டதாம் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம். நேற்று வரை தமிழ் சினிமா உலகின் முன்மாதிரியாக மீண்டும் கதை இலாகாவை கொண்டு வந்துவிட்டார்கள் என புளாகிங்கிதம் பேசியவர்கள் கூட விடிகாலையில் இப்படி ஒரு செய்தி வரும் என நினைத்துப் பார்க்கவில்லையாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது!


Click it and Unblock the Notifications











