சீனியர் நடிகையின் சில்மிஷ வேலை.. குடும்பத்தையே பிரிக்கிற அளவுக்கு வந்துடுச்சாம்.. எங்க போய் முடியுமோ?

By Staff

சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமாவிலேயே கொஞ்சம் சீனியர் நடிகை. தமிழில் இருந்து திரைப்பயணத்தைத் தொடங்கி இருந்தாலும், நடிகைக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகை போட்ட ஆட்டமும் காட்டிய கிளாமரும் மொத்த தெலுங்கு திரையுலகத்துக்கே பிடித்துப் போனதால் நடிகையை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்தது மாதிரி மாறி மாறி படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

நடிகை ஆரம்பத்தில் அப்பாவியாக இருந்ததால் நடிகையின் சுபாவம் பலருக்கும் பிடித்துப்போனது. ஆனால் நடிகை இப்படி எல்லாம் இருந்தால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள், எனவே கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து தனது உஷார் ரூட்டை மாற்றியுள்ளார். அதாவது இவரது உஷார் ரூட் ஒரு உச்ச நடிகரைக் கைக்குள் போட்டு வைத்துக் கொண்டு, அவ்வப்போது அவருடன் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டினை எப்போதும் ரன்னிங்கில் வைத்திருப்பதுதானாம். நடிகையின் இந்த சூட்சுமம் தெரியாத நடிகர் ஒருவர் நடிகை விரித்த வலையில் சிக்கிக் கொண்டார்.

மான் கிடைத்தால் போதும் என நினைத்து வலையில் விரித்த நடிகைக்கு புலியே கிடைத்துவிட்டதால் நடிகருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நடிகையின் டச் டச் அப்ரோச் நடிகருக்கும் பிடித்து போனதால், எல்லாமே பச்சைக் கொடியாக மாறியுள்ளது. நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் உள்ளார்கள். ஆனாலும் நடிகருக்கு நடிகை மீது இருந்த ஈர்ப்பு, மனைவியை வீட்டை விட்டு துரத்தும் அளவிற்கு இருந்துள்ளது.

Tamil Cinema Actress Gossip About Married Actor Who In Living Relationship With Actress

மான் வலையில் விழுந்த புலி: நடிகரின் நடவடிக்கையை திட்டம் தீட்டி வந்த மனைவி, ஒரு கட்டத்தில் நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். குழந்தைகளுக்காகவாவது நடிகர் தனது மனைவியை அழைத்து வருவார் என நடிகரின் பெற்றோர்கள் எதிர்பார்த்தார்கள். நடிகரோ விட்டது தொல்லை என நடிகையோடு இப்போது சந்தோஷமாக இருக்கிறாராம். இப்படி குடும்பத்தை கெடுப்பது நடிகைக்கு புரிந்தாலும் நடிகரை வலையில் வீழ்த்த முயற்சி செய்து கடைசியில் தானே நடிகரிடம் கிறங்கிக் கிடப்பதாக இது தொடர்பாக கேட்டவர்களிடம் கூறியுள்ளார். அதனால்தான் தான் திருமணமே செய்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

எதிர்கால திட்டம்: இது மட்டும் இல்லாமல், நடிகர் தற்போது வேறு ஒரு தொழில் தொடங்கியுள்ளாராம், எதிர்காலத்தில் நடிகை சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி நடிகருக்கு உறுதுணையாக அந்த தொழிலுக்கு உதவும் வகையில் இருக்கப் போவதாகவும் திட்டம் தீட்டி வருகிறாராம். அதனால்தான் தான் திருமணமே செய்யவில்லை என்றும் தன்னை கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளித்து வருகிறராம் நடிகை. ஆனால் நடிகையின் சினிமா வாழ்க்கைக்காக போடப்பட்ட திட்டம், இப்போது ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது என விவரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X