பெரும் புள்ளிகள் போட்ட பக்காவான ஸ்கெட்ச்.. அரசியல் பகடக்காயாக மாறிய நடிகர்.. ஒரே புலம்பல்
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து அரசியலில் கால் வைத்து தமிழ்நாட்டை ஆளப்போகிறோம், நல்லாட்சி தரப்போகிறோம் என்று கூறுபவர்கள் எண்ணிக்கை என்பது ரொம்ப அதிகம். அதில் வெற்றியை எட்டியவர்கள் வெகு சிலர் தான். ஆனால் நடிகர்களுக்கு தமிழ் நாடு அரசியல் களத்தில் எப்போதும் சிறப்பு இடம் இருப்பதுடன் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தூக்கத்திலும் தயாராகத்தான் உள்ளார்கள்.
இது ஒரு புறம் இருக்க ரசிகர்கள் பேனர்கள் வைக்கிறார்கள், தலைவா வா தமிழ்நாடு உனக்காக காத்துக் கொண்டு உள்ளது, நாளைய தலைமைச் செயலகமே, வருங்கால முதலமைச்சரே என்ற பேனர்கள் போஸ்டர்களைப் பார்த்து சிலாகித்துக் கொள்ளும் நடிகர்கள் தங்களது படங்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் கிடைக்கும் வசூலை மனதில் வைத்து, இப்போது தும்மினால் தான் சரியாக இருக்கும் என்று அரசியலில் குதித்து விடுகிறார்கள்.

வேலைத்திட்டம்: ஆனால் அரசியலின் ஆழம் அவர்களுக்கு பிடிபடுவதில்லை. இப்படி இருக்கையில் அரசியலில் குதித்த ஒரு நடிகரின் கட்சியில் திடிரென தங்களை இணைத்துக் கொண்டனர். நடிகரும் தனது கட்சியில் இருந்தால் தான் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்று கணக்கு போட்டுத்தான் தனது கட்சியில் வந்து இணைந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் நடிகரின் கட்சியில் வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவருமே சில தனித்தனி வேலைத் திட்டத்துடன் தான் கட்சியில் இணைந்தார்களாம்.
பக்கா ஸ்கெட்ச்: அதுவும் அவர்கள் அனைவருமே நடிகரை தேர்தல் நெருங்கும் நேரத்திற்குள் சிலபல வேலைகளைச் செய்து நடிகரை ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதை நோக்கி நகர்த்துவதான் அந்த தனித்தனி வேலைத்திட்டம். இப்படி இருக்கையில் நடிகரை அவர்கள் நினைத்தது போல அந்த கட்சியின் கூட்டணி நோக்கி நகர்த்தி விட்டார்கள் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது. நடிகரும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவுக்கு தலையசைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்று கூறப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்டவர்கள் நடிகரை கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











