என்னத்த சொல்ல! இமேஜ் டேமேஜ் ஆகாமல் பார்த்துக் கொள்ள இளம் இயக்குநரை பலிகடாவாக்கும் உச்ச நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகின்றார். போலீஸ் கதாபாத்திரம் கொடுத்தாலும், தாதா கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்திப் போகின்றவர். அவ்வப்போது கிராமத்து கதைகளில் நடித்தும் தனது தாய்மார்கள் ஆடியன்ஸை தக்கவைத்து வருபவர். தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான காலகட்டத்தில் இவரால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என ஏளனம் செய்தவர்கள் பலர் இருக்கின்றனர். இவரா கதாநாயகன், இவரா எனக்கு ஜோடி? என இவரது படங்களை உதறித் தள்ளிவிட்டுப் போன கதாநாயகிகள் அதன் பின்னர் இவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டவர்.
தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்றால் அவர் நல்லவராகத்தன் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை முதன் முதலில் உடைத்தவர் இந்த நடிகர்தான். அதன் பின்னர் இவரது ஃபார்முலாவை பல முன்னணி நடிகர்களும் பின்பற்றி பல ஹிட் கொடுத்துள்ளனர். லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த நடிகர் கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தபோது இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியது.

பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பதை வழக்கமாகக் கொண்டு இருப்பவர். சுற்றுலாவை முடித்துவிட்டு வந்தபின்னர் அடுத்த படத்தில் கமிட்டாகும் பழக்கத்தைக் கொண்ட நடிகர் தற்போது இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகின்றார். பரவாயில்லை இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை அனுகியுள்ளனர். ஆனால் அவரோ எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்காமல் அனுப்பிவிட்டாராம்.
பலிகடாவான இளம் இயக்குநர்: காராணம் புரியாமல் அங்கிருந்து கிளம்பிய தயாரிப்பாளர்களுக்கு இப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்திருக்கின்றதாம். அதாவது நடிகர் முதலில் கமிட்டான படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் முகம் கொடுத்து பேச முடியாத அளவிற்கு சண்டை ஏற்பட்டு விட்டதாம். அவர்கள் தரப்பில் இருந்து விஷயம் லீக் ஆவதற்கு முன்னர் தான் முந்திக் கொள்ள வேண்டும் என இளம் இயக்குநரை அழைத்து தனக்கு ஒரு படம் பண்ணும்படி டேட் கொடுத்துள்ளாராம்.
நடிகரைப் புகழும் இயக்குநர்: படம் குறித்த அறிவிப்புகள் வெளியானதில் இருந்து படத்தின் இயக்குநரான அந்த இளம் இயக்குநர் நடிகரைப் புகழ்வதை அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக செய்து வருகின்றாராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்குப் பின்னர் நடிகரைப் பற்றி தனது சமூக வலைதளங்களில் இயக்குநர் ஆஹா ஓஹோ என புகழ்ந்து பதிவிட, நடிகர் முதலில் கமிட்டான படத்தின் பிரச்னைகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
என்னதான் நடக்கும்? இந்த செயல் நடிகருக்கு பெரிய சந்ஷோஷத்தைக் கொடுத்துள்ளதாம். தனது ப்ளான்படி அனைத்தும் சரியாகச் செல்வதால் நடிகருக்கு தற்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றதாம். பல வருடங்களாக தான் கட்டிக் காத்துவரும் தனது இமேஜுக்கு டேமேஜ் ஆகிவிடுமோ என்ற எண்ணம் இப்போதுதான் நடிகருக்கு விலகியிருக்கின்றதாம். இதனால் தான் முதலில் கமிட்டாகியிருந்த படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீண்டும் தனது டெரர் முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டாராம். எது எப்படியோ இளம் இயக்குநர் நல்ல படத்தை கொடுத்து பெரிய ஹிட் கொடுத்துவிட்டால் அதுமட்டும்தான் இந்த சச்சரவுகளில் ஒரே நல்லவிஷயமாக இருக்கும் என்ற பேச்சுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











