நடிகர் மனைவியை பிரிய நான் காரணமா? நான் என்னடா பாவம் பண்ணேன்.. முத்திரை குத்தாதீங்க.. புலம்பும் நடிகை

By Staff

சென்னை: இந்த நடிகை இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். பொதுவாக ஒரு நடிகை ஒரு நடிகருடன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனால் இருவருக்கும் முடிச்சு போட்டு கிசுகிசுக்க ஆரம்பித்து விடுவார்கள் சினிமாகாரர்கள். இதில் இந்த நடிகை எதிர்கொள்ளும் விமர்சனம், தான் நடித்த படத்தின் நடிகர், அவரது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் அவர்களின் விவாகரத்துக்கு காரணம் அந்த நடிகைதான் எனக் கூறினார்கள். பாவம் அந்த நடிகை இது குறித்து புலம்பிக் கொண்டு உள்ளாராம்.

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. மாடலிங்கில் இருந்து வந்ததாலோ என்னவோ கிளாமரான காட்சிகளில் நடிக்க கொஞ்சமும் யோசிக்காமல் ஓ.கே. சொல்லி விடுகிறாராம். இப்படியான நிலையில் நடிகை தான் அறிமுகமான படத்தில் நடிகருடன் செம க்ளோஸாக நடித்தார். அதுவும், லிப் லாக் காட்சியில் தொடங்கி பெட் ரூம் காட்சி வரை கிளாமரில் புகுந்து விளையாடி இருந்தார் நடிகை.

Tamil Cinema Gossip Gossip Cinema Gossip

நடிகையின் இந்த தாராள கவர்ச்சி காட்சிகளை பார்த்த பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க கமிட் செய்துள்ளார்கள். ஆனால் நடிகை முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் தன் மனதிற்கு பிடித்த சில கதைகளுக்கும் ஓ.கே. சொல்லி நடித்தும் வருகிறார். இப்படியான நிலையில் இவருடன் நடித்த நடிகர், அவரது மனைவி பிரிவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அவரும் அவரது மனைவியும் அமர்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்து, அறிவித்தார்கள்.

கழுவி ஊற்ற: ஆனால், நெட்டிசன்கள் அந்த நடிகருடன் செம நெருக்கமாக நடித்து, நடிகரை வளைத்துப் போட்டு விட்டார், அதனால் தான் நடிகர் தனது காதல் மனைவியை பிரிகிறார் என்றெல்லாம் கூறினார்கள். இன்னும் சொல்லப்போனால், நடிகையின் சமூக வலைதளப் பக்கத்தில், பலரும் நடிகையை கழுவி ஊற்ற ஆரம்பித்தார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் மனம் உடைந்து நொந்து போயுள்ளார் நடிகை.

புலம்பல்: குறிப்பாக தனது நெருங்கிய வட்டத்தில் நான் என்னடா செய்தேன், என்னைய ஏதுக்குடா இப்படி போட்டு அடிக்கிறீங்க. அந்த நடிகர் அவரு பொண்டாட்டிய டைவர்ஸ் செய்தால் அதற்கு நான் என்ன செய்வேன். அந்த நடிகருடன் நான் நடித்தது ஒரு குற்றமா என புலம்பி வந்துள்ளார். இந்த புலம்பலை அவர் இப்போது பொது வெளிகளிலும் புலம்ப ஆரம்பித்துள்ளார். நடிகையைப் பார்த்து பலரும் பாவமா இருக்கேப்பா எனக் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X