பிசினஸில் பிசியாக இருக்கும் நடிகையின் கணவர்.. அப்செட்டில் புது பொண்டாட்டி..ரூட்டை மாத்தீட்டாங்களாம்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் எப்படியாவது முட்டி மோதி மேலே வந்து விட வேண்டும் என போராடும் நடிகை. ஆனால், பலரும் நடிகையை பல விஷயங்களுக்கு பயன்படுத்திவிட்டு கழட்டி விட்டுள்ளார்கள். ஆனாலும் ரியாலிட்டி ஷோவில் கிடைத்த பிரபலத்தை வைத்து திரையுலகில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் நடிகை ஏன்டா கல்யாணம் செய்தோம் என யோசிக்கிறாராம்.

நடிகை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போது, அங்கு வந்த ஒருவருடன் நெருங்கிப் பழகினார். ஆனால் ஷோ முடிந்த பின்னர் அவர் நடிகையை கழட்டி விட்டுவிட்டு, இன்னொருவருடன் ஜாலியாக சென்றுவிட்டார். இப்படி நம்புவதும் ஏமாறுவதும் என நடிகையின் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடைபெற்றுள்ளது.

Tamil Cinema Gossip Gossip Cinema Gossip Gossip News Trending Gossip Cinema Gossip News

இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் முயற்சி செய்வது ஒருபுறம் இருக்கட்டும், காலா காலத்தில் கல்யாணம் முடித்து விடலாம் என, முடிவு செய்து தனக்கு நன்கு தெரிந்த, பள்ளிக் கால நண்பரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துவிட்டார். திருமண வாழ்க்கையில் செம ஜாலியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், இன்ஸ்டாகிராமில் குடும்பம் நடத்திக் கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம்: இன்ஸ்டாகிராமில் வழக்கம் போல் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் இருக்கும் வித்தியாசம் என்றால், திருமணத்திற்கு முன்னர் கூட எப்போதாவதுதான் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பின்னர், அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.

கிளாமர்: திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஹனிமூனுக்கு சென்றதுதான். அதன் பின்னர் கணவருடனான புகைப்படங்கள் எதையும் நடிகை இன்ஸ்டாகிராமில் பகிரவில்லை. கணவரும் எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என செம பிஸியாக இருக்கிறார். காதலர் தினத்திற்கு ஒன்றாக வெளிநாட்டிற்கு அவுட்டிங் போலாம் என நடிகை கூறியதற்கு, என்னால் வரமுடியாது. நீ எங்க போகனும் நினைக்கிறாயோ சொல்லு அங்கு டிக்கெட் போட்டு கொடுக்கிறேன், நீ போய்ட்டு வந்திடு எனக் கூறியுள்ளார்.

வம்பு: இது என்னடா வம்பா போச்சு, காதலர் தினத்திற்கு நான் மட்டும் தனியாக போய் என்ன செய்வது என புலம்பிய நடிகை, அருகில் இருக்கும் நாட்டிற்கு தனியாக போய் விட்டு வந்துள்ளார். எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று கணவர் பிசியாக இருப்பதால், நாம், கணவருக்காக காத்துக் கொண்டு இருக்காமல், சினிமாவில் அடுத்தகட்டமாக முன்னேறுவதற்கான வழிகளைப் பார்க்கலாம் என முடிவு செய்து, தீவிரமாக பட வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X