நடிகருடன் ஓவர் நெருக்கம்.. நடிகையின் காதலன் வைத்த செக் மேட்... கையும் களவுமாக சிக்கிய நடிகை!

By Staff

சென்னை: இந்த நடிகை இன்னும் தமிழில் நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும் நடிகைக்கு தமிழிலும் பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கும் விவாகரத்து புகழ் நடிகருக்கும் இடையில் நெருக்கமான உறவு இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தை காட்டிலும், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் பலம். இந்த பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாம்.

அதாவது, நடிகைக்கும் நடிகருக்கும் ஒரு பார்ட்டியில் தான் பழக்கமே ஏற்பட்டுள்ளது. முதல் சந்திப்பிலேயே நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் நல்ல ரேம்போ செட் ஆகி உள்ளது. அதன் பின்னர் பார்ட்டி என்றாலே நடிகரும் நடிகையும் அட்டனன்ஸ் போட ஆரம்பித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் நடிகைக்கும் நடிகருக்குமான நெருக்கம் என்பது தனிமையில் சந்திக்கும் அளவுக்கு இருந்துள்ளது.

Tamil Cinema Gossip Actor And Actress Be Very Close and Met Personally Actress Lover Find

நடிகையின் காதலர்: நடிகைக்கு ஏற்கனவே காதலர் இருக்கிறாராம். இப்படி இருக்கையில் தனிமையில் சந்திப்புகளை இந்தியாவில் நடத்தினால் தனிப்பட்ட காதல் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று யோசித்த நடிகை, வெளிநாடுகளில் சந்திப்புகள் என்றால் உடனே டபுள் ஓகே சொல்லி விடுகிறராம். நடிகைக்கு காதலன் இருக்கும் போது நடிகருடன் நெருக்கம் காட்ட காரணமே திரைத்துறையில் இருப்பவராக இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவு தான் நடிகருடனான பழக்கம் என்று கூறப்படுகிறது.

சந்தேகம்: ஒரு கட்டத்தில் அவர்கள் குறித்த பேச்சுக்கள் அதிகமாக மாற, நடிகையின் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் நெருப்பில்லாமல் புகையாதே என்று நடிகையை பின் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று வேவு பார்க்க தனிப்பட்ட முறையில் ஆட்களை நிர்ணயித்துள்ளார். அதன் பின்னர் தான் நடிகைக்கு நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டு, நடிகையை அழைத்து வெளுத்து வாங்கி விட்டாராம்.

சிக்கிக் கொண்ட நடிகை: என்னடா இப்படி ஆகிவிட்டது என்று, நடிகை தனது காதலனை படாத பாடுபட்டு சமாதானப்படுத்தினாராம். இது மட்டும் இல்லாமல் உடனே காதலனோடு மூன்று நாட்கள் ட்ரிப் ஒன்றையும் ஏற்பாடு செய்து, காதலனை சமாதானப்படுத்தி உள்ளாராம். அதன் பின்னர் இவர் தான் எனது காதலன், இவரைத்தான் கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன், எனக்கு அந்த நடிகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லாமல் சொல்வது போல தனது காதலன் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க முடிவெடுத்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X