மனைவியை அம்போனு விட்ட நடிகர்.. நாளுக்கு நாள் நடிகையுடன் நெருக்கம்.. காதலர் தின கொண்டாட்டம் வேற!

By Staff

சென்னை: இந்த நடிகர் திரையுலகில் தனக்கென தனி மதிப்பும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ள நடிகர். இவருக்கு என தனி மார்க்கெட் உள்ளது. வாரிசு நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் பல சவால்களையும் ஏளனங்களையும் எதிர் கொண்ட நடிகர் அதன் பின்னர் பெரிய ஸ்டாராக மாறினார். இவர் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இப்போது நடிகர் செய்யும் சேட்டை ரொம்பவும் ஓவராக உள்ளது. மனைவியுடன் வாழாமல் ஒரு நடிகையுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகரும் நடிகையும் இணைந்து முதல் முறையாக ஒரு படத்தில் நடித்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அவ்வப்போது சில படங்களில் இணைந்து நடித்து வந்தார்கள். இவர்கள் கூட்டணி என்றாலே வெற்றிக் கூட்டணி என்ற பெயர் இருந்தது. இப்படி இருக்கும்போது நடிகருக்கும் நடிகைக்கும் ஓவர் நெருக்கம் ஏற்பட்டு விட்டது.

இதில் நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. நடிகையுடன் நடிகர் போடும் ஆட்டமும் லூட்டியும் நடிகரின் மனைவிக்கு தெரியவர, நடிகரை விட்டு வெளியேறிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் நடிகரை விட்டுவிட்டு தனது குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். இப்படியே இருந்தால் குடும்பம் சரிப்பட்டு வராது என நடிகரின் பெற்றோர்கள் நடிகரை பேசி, திட்டி, அறிவுரை கூறி அழைத்துச் சென்று, நடிகரின் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்கள்.

Tamil Cinema Gossip Actor And Actress in livin Realationship After Marriage

வெளியேறிய மனைவி: இப்படி இருக்கும்போது நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான உறவில் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் மெயிண்டைன் செய்து கொண்டு இருந்துள்ளார்கள். இது நடிகரின் மனைவிக்கு மீண்டும் தெரியவர நடிகரின் மனைவி தற்போது நடிகரை மொத்தமாக விட்டு விலகி தனது தாய் தந்தையருடன் உள்ளார்.

ஓவர் நெருக்கம்: இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நடிகை நடிகருடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறாராம். இன்னும் சொல்லப்போனால் நடிகரும் நடிகையும் இப்போது நடிகரின் மனைவி தொல்லை இல்லாமல் செம ஜாலியாக உள்ளார்களாம். நினைத்த நேரத்தில் சந்தித்து கொள்கிறார்களாம். நினைத்தால் அவுட்டிங்காம். நினைத்தால் மீட்டிங், பார்ட்டி என இவர்களின் அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டு உள்ளதாம். இந்நிலையில் நடிகை கடந்த ஆண்டில் தனது மனதுக்கு நெருக்கமான ஒரு பொருளை இழந்துவிட்டார்.

காதல் பரிசு: நடிகரோ தனது மனதுக்கு நெருக்கமான நடிகையின் மனது கஷ்டத்தில் உள்ளதே என இந்த ஆண்டு காதலர் தினத்தில் தொலைந்த பொருளை போல இன்னொரு பொருள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் நடிகரின் மகனுக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது நடிகர் நடிகர் ரொம்பவுமே ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார் என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X