கதாநாயகி ஆகலாம்னு வந்த இளம் நடிகை.. சீரழித்தாலும் கைவிடாத மூன்றெழுத்து நடிகர்!
சென்னை: இந்த நடிகை இப்போது கதாநாயகி மெட்டீரியலாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாகவே தனது சினிமா கெரியரைத் தொடங்கினார். பந்தய நடிகருக்கு மகளாக நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தமிழ் திரையுலகில் சம்பாதித்தவர். தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிகை கலக்கி வந்தார். இப்படி இருக்கும்போது, நடிகை இப்போது கொஞ்சம் அப்செட்டில் உள்ளாராம்.
அதாவது இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கிறேன் என பல இயக்குநர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அப்படிக் கூறிய இயக்குநர்கள் எல்லாம், படம் முழுக்க நீங்க கதாநாயகி இல்லை, ஃபிளாஷ் பேக் போர்ஷனில் மட்டுமே நீஙக் கதாநாயகியாக வருவீங்க என்றும், அந்த ஃபிளாஷ் பேக்கில் கதாநாயகன் போர்ஷனில் வேறு ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தான் நடிப்பார் என்று எல்லாம் கூறி உள்ளார்கள்.

கதாநாயகி கனவு: இந்த வாய்ப்புகளுக்கு எல்லாம் இந்த இளம் நடிகை நோ சொல்லியே வந்துள்ளார். இப்படியான காலகட்டத்தில்தான், நீதாம்மா இந்த படத்தோட கதாநாயகி. உன்னை சுத்தி தான் கதையே நகரும். ஆனால், உனக்கு ஜோடியா என்னோட அக்கா பையன் தான் நடிப்பான். எங்க அக்கா பையனை சினிமா அறிமுகம் செய்து வைக்கலாம்னு இருக்கோம். நீ நடுச்சா, உனக்கும் கதாநாயகியாக இந்த படத்துல புரோமோஷன் கிடைச்ச மாதிரி இருக்கும் எனக் கூறி உள்ளார் அந்த நடிகர் & இயக்குநர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்துல நீ நடி, அடுத்த படத்துல எனக்கு ஜோடியா நடிக்க நானே வாய்ப்பு கொடுக்குறேன் எனக் கூறி உள்ளார் அவர். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஜெயிக்கும், அதைப்பத்தி நீ கவலைப்படாத எனக் கூறி நடிகையை நடிக்க வைத்துள்ளார் அவர்.
அப்செட்: அந்த இயக்குநர் & நடிகர் சொன்னது போலவே படம் சிறப்பாக வந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஃபீல் குட் லவ் ஸ்டோரி சொன்னது போல படம் அமைந்தது. ஆனால், இந்த படத்தோடு ரிலீஸ் ஆன இன்னொரு படத்தின் ஆரவாரமான வெற்றி இந்த படத்தின் வெற்றியை பாதித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஆனால் படத்தில் பணியாற்றியது தனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக அந்த இயக்குநர் & நடிகரிடம் இந்த இளம் நடிகை கூறி உள்ளார்.
உத்திரவாதம்: நடிகை தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் பேசுகிறார் என்பதை உணர்ந்த அவரும் அடுத்த படத்தில் உனது வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் வாய்ப்பு கொடுக்கிறேன் என உத்திரவாதம் கொடுத்து அனுப்பி உள்ளார். தன்னை நம்பி வந்த நடிகையை உயர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தைக் கேள்விப்பட்டவர்கள் நடிகரை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











