நெருங்கிய நிறுவனத்தின் மூலம் செட்டில்மெண்ட்டை முடித்த அரசியல் நடிகர்.. பிரச்சாரத்திற்கு ரெடியான சினிமா படை

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சமீபத்திய கடைசி நடிகர். சினிமாவிலேயே நல்ல சம்பளம் கண் இமைத்தால் நினைப்பதை செய்யும் அளவுக்கு நடிகருக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த ரசிகர்கள் பட்டாளத்தை ஓட்டாக மாற்ற நடிகர் எடுத்த முடிவுதான் அரசியல். தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், நடிகர் தேர்தலுக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தீவிரமாக பிளான் போட்டு தயாராகி வருகிறார்.

அதாவது, நடிகரின் கட்சியைப் பொறுத்தவரை எப்போதும் செய்தி சேனல்களில் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்க வேண்டுமாம். அதுவும் குறிப்பாக தேர்தல் பிரச்சார காலத்தில் தனது கட்சியின் பிரச்சாரம் குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்.

அதற்காக நடிகரும் நடிகருக்கு வேண்டப்பட்ட வரும் போட்ட பிளான் நடிகரின் கட்சிக்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம். அதாவது, நடிகர் தனது கட்சிக்கு பிரச்சாரத்திற்கு தனக்கு நெருக்கமான முன்னணி நடிகர்கள், நடிகைகள், முன்னணி திரைப்பிரபலங்கள் என அனைவரையும் பிரச்சாரத்தில் ஈடுபட வைக்க பக்காவான மாஸ் பிளான் போட்டுள்ளாராம். அதற்காக, நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பிரபலங்களுக்கும் பெரிய அளவிலான தொகையை கைமாற்றி விட்டுள்ளாராம் நடிகர்.

Tamil Cinema Gossip Actor Come Politician Who Makes Ready To His Well Wishers For Election Campaign

கைமாறிய பெரிய தொகை?: அதையும் நேரடியாக கொடுத்தால் பெரிய கணக்கு காட்ட வேண்டி வரும், பெரிய சிக்கல் ஏற்படும் என்று, தனக்கு நெருக்கமான நிறுவனத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதில் பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வைத்துள்ளார். வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரபலங்கள் வாங்கும் தொகையை விட பல மடங்கு கூடுதலாக, இன்னும் சொல்லப்போனால் ஒரு படத்திற்கு அவர்கள் வாங்கும் அளவுக்கான சம்பளத்தை கொடுத்துள்ளாராம் நடிகர்.

பிரச்சாரத்திற்கு ரெடி: மிகவும் ஸ்மூத்தாக செட்டில்மெண்ட் முடிந்ததால், நடிகர் ரொம்பவும் நிம்மதியாக இருக்கிறராம். ஏற்கனவே நடிகர் கட்சிக்கு சின்னம் எல்லாம் ஒதுக்கி விட்டதால் தேர்தல் தேதி அறிவித்தால், வேட்பாளர்களை அறிவித்து விட்டு திரைப்பிரபலங்களை பிரச்சாரக் களத்தில் களமிறக்க தயாராக இருக்கிறராம். நடிகர் நாளுக்கு நாள் தனது அரசியலை பரபரப்பாக மாற்றி வருகிறார் என்ற பேச்சும் அதிகம் ஓடிக் கொண்டு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X