மாஸ் நடிகரின் ரசிகர்கள் விஷத்தை கக்காமல் இருக்க காரணம் இருக்காம்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

By Staff

சென்னை: வழக்கமாகவே அந்த சீனியர் நடிகரின் படம் வெளியாகும் நாட்களில் குறுக்க மறுக்க என ஓடிக் கொண்டு இருப்பர்கள் மாஸ் நடிகரின் ரசிகர்கள். இணையத்தை மொத்தமாகவே வன்ம குடோனாக மாற்றிவிடுவார்கள். அப்படியானவர்கள் இந்த முறை அடக்கி வாசிக்க பல காரணங்கள் இருக்கிறதாம்.

அதாவது சீனியர் நடிகரும் மாஸ் நடிகரும் தங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக் கதை சொல்கிறேன் என இருவரும் பனிப்போர் புரிந்து கொண்டால், அவர்களது ரசிகர்கள் இணையத்தில் தேரை இழுத்து வீதியில் விட்ட கதையாக மோதிக் கொள்வார்கள். குறிப்பாக நடிகர்களின் கடந்த கால கிசுகிசுக்களை எல்லாம் வண்டி வண்டியாக இறக்கிவிடுவார்கள்.

இப்படி மோதிக் கொள்ளும் இந்த ரசிகர்களில் இம்முறை சீனியர் நடிகரின் படம் வெளியாகிறது. ஆனால் மாஸ் நடிகரின் ரசிகர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். இதுவே பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. மாஸ் நடிகரை சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறி, அரசியலில் களமிறங்கியது தான் காரணம் என சிலர் கூறுகிறார்கள். அதுவும் அடுத்த 8 மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மாஸ் நடிகர் எதிர்கொள்ள வேண்டும் என்பதால், ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லி அறிவுரை எல்லாம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Tamil Cinema Gossip Actor Give Special Advice To His Fans To Avoid Twitter Fight

சமாதானம்: அதேபோல், மாஸ் நடிகர் குறித்து ஏற்கனவே சீனியர் நடிகர் மனம் திறந்து பேசிவிட்டார். அப்படி இருக்கும்போது அது சமாதானத் தூது எனக் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த முறை கூட சீனியர் நடிகர் கதை எதுவும் கூறாமல் புரோமோசன் வேலைகளை மட்டும் செய்துள்ளதால், அவரும் இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க நினைக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

வன்மம்: ஆனாலும் சில ரசிகர்கள் இணையத்தில் வன்மத்தை கக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியான ரசிகர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் மாஸ் நடிகர் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறாராம். வெகு சீக்கிரமே சீனியர் நடிகருக்கு, சினிமா துறையில் அவர் செய்த சாதனைக்காக மாஸ் நடிகர் வாழ்த்து சொல்லவும் தயாராகி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X