நடிகையை டார்ச்சர் செய்யும் நடிகரின் மேனேஜர்.. காரியம் முடிந்ததும் கை மேல பணமாம்.. வலை வீசுறாங்களே!

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவிலேயே நல்லா கல்லா கட்டி வந்தவர்தான். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென தொழிலை மாற்றி உள்ளார். அதனால் அவருக்கு உள்குத்து வெளிக்குத்து என எல்லாம் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் தனது புதிய தொழிலுக்கு பலம் சேர்க்க நடிகைகளுக்கு தனது மேனேஜர் மூலம் தூது விட்டு வருகிறாராம்.

நடிகர் தொழிலை மாற்ற முக்கிய காரணமே அவரது மேனேஜர் மற்றும் நடிகரின் அப்பா மூலம் நடிகருக்கு அறிமுகமானவர் என இருவரும் இணைந்து நடிகரின் மண்டையைக் கழுவியதுதானாம். எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிய நடிகர் அவர்களின் பேச்சைக் கேட்டு, நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருந்த சினிமாவை விட்டுவிட்டு, புதுத் தொழிலை தொடங்கி உள்ளாராம்.

என்னதான் புதுத் தொழில், பெரிய அளவில் முதலீடு இருந்தாலும் நடிகருக்கு தனது தொழிலில் வெற்றி பெற, நடிகைகளின் ஆதரவு ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறாராம். இதனால் தனது தொழில் தொடர்பான விளம்பரத்தில் ராப்பகலாக ஈடுபட நடிகைகளை தமிழ் சினிமாவுக்குள்ளே தேடி வருகிறாராம் நடிகர்.

Tamil Cinema Gossip Actor Manager Who Forced To Actress to Support Actor New Business

புது தொழிலுக்கு நடிகைகள்: இதற்காக தனது மேனேஜர் மூலம் நடிகைகளுக்கு தூதுவிட்டு வருகிறாராம். இதனால் நடிகைகளுக்கு தகவலை கொண்டு செல்லும் மேனேஜரோ, இதுதான் விஷயம் என்று பட்டென்று சொல்லாமல், நடிகர் புதுத் தொழில் தொடங்கினாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பார், எனவே இப்போது இந்த விளம்பரத்தில் நீங்கள் பங்கு பெற்றால், நடிகரின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று பொய் வாக்குறுதிகள் கொடுத்து வருகிறாராம். மேலும் விளம்பர வேலைகள் முடிந்த கையோடு உடனே செட்டில்மெண்ட் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து வருகிறாராம்.

நடிகைக்கு டார்ச்சர்: நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு, இந்த விளம்பரத்தில் பங்கு கொள்ள தனி சம்பளம் என நடிகைகள் பலரும் உடனே ஓகே ஓகே என்று கூறி வருகிறாராம். இதில் ஒரு நடிகை மட்டும் நோ சொல்ல அந்த நடிகை தொடர்பாக தொடர்ந்து அவதூறு பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறாராம் மேனேஜர். இதற்கென தனி குரூப்பே நடத்தி வருகிறாராம். நடிகருக்கும் அவரது மேனேஜருக்கும் எதற்கு இந்த வீண் வேலை என்று விபரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X