ச்சீ மோசம்.. முன்னாள் மனைவியை கடுப்பேற்றும் திடீர் காதலி.. வாழ்க்கையை அணுவணுவா ரசிக்கிறாங்களாம்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில், ஒருகாலம் 'ஜெயம்' நாயகனாகக் கொண்டாடப்பட்டு, குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து பெண்கள் மனதில் இடம்பிடித்த ஒரு வாரிசு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கை, தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு திரைப்படத்தைப் போலவே பரபரப்பாக நகர்கிறது. பல வருடங்கள் நீடித்த அவரது இனிமையான இல்லற வாழ்க்கை, திடீரென விவாகரத்தில் முடிந்தது கோலிவுட்டை அதிர வைத்தது. ஆனால், அந்தப் பிரிவுக்குப் பின் அரங்கேறும் தொடர் சம்பவங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

நடிகர் தனது விவாகரத்து முடிவை தனியே அறிவித்தபோது, அவரது முன்னாள் மனைவி "தனக்கு இதில் உடன்பாடில்லை" என வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார். கணவரை மீண்டும் அடையப் போராடிய அவர், உருக்கமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அதேசமயம், ஒரு பிரபல 'பாப்' பாடகி நடிகரின் வாழ்வில் புயலென நுழைந்தார். இந்தப் பாடகிக்கும் நடிகருக்கும் உள்ள நெருக்கமே பிரிவுக்குக் காரணம் என்ற முந்தைய பேச்சுக்கள் தற்போது உண்மையாகி வருகின்றன.

பொதுவாக, உறவு முறியும்போது சினிமா நட்சத்திரங்கள் ஒரு கண்ணியத்தைக் காப்பது வழக்கம். ஆனால், இந்தப் பாடகியோ சமூக வலைத்தளங்களையே ஒரு போர்க்களமாக மாற்றி வருகிறார். சமீபத்தில், நடிகருடன் தனது பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவர், அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். "வாழ்க்கையை அணுவணுவாக ரசிக்கிறோம்" போன்ற தலைப்புகளுடன் அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும், முன்னாள் மனைவியைக் குறிவைக்கும் அம்புகளாகப் பார்க்கப்படுகின்றன.

நடிகருடன் வாழ்வது வரமாம்: "இந்த மனிதருடன் வாழ்வது ஒரு வரம்" என்பது போன்ற பாடகியின் கருத்துகள், நடிகரின் முன்னாள் மனைவிக்கு மன உளைச்சலை அதிகப்படுத்துவதாகச் சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. தன் கணவரைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் வலியைச் சற்றும் உணராமல், "நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நீ பார்த்துக் கொண்டிரு" என்ற ரீதியில் பாடகியின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Tamil Cinema Gossip Actor New Lover Who Attacks Actor s Wife Indirectly By Her Social Media Post

வேண்டும் என்றே: முன்னாள் மனைவி ஒருபுறம் சட்ட ரீதியான போராட்டங்களுக்குத் தயாராகி வர, நடிகர் எதையும் பொருட்படுத்தாமல் இந்தப் புதிய உறவில் முழுமையாக திளைத்துள்ளார். பாடகி தனது சமூக வலைத்தளப் பதிவுகளில் செய்யும் அனைத்து அலப்பறைகளுக்கும் நடிகரின் மவுனமே மறைமுக ஆதரவாகப் பார்க்கப்படுகிறது. "தனது தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது" என்பதில் உறுதியாக இருந்தாலும், பல ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த ஒருவரைக் காயப்படுத்தும் வகையில் புதிய காதலியின் இத்தகைய செயல்களை அவர் தடுக்காதது வருத்தமளிப்பதாகக் கூறப்படுகிறது.

மோசம்: ஒருவர் தனது வேதனையைத் தத்துவங்களாகவும், மற்றொருவர் தனது கொண்டாட்டங்களைச் சவாலாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரும் இந்த முக்கோணக் காதல் மற்றும் விவாகரத்து விவகாரம், தற்போது கோலிவுட்டின் மிக மோசமான கிசுகிசுவாக மாறியுள்ளது. அந்த திடீர் காதலியின் அடுத்தடுத்த பதிவுகள் எங்கே போய் முடியுமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X