நம்பர் நடிகையை பிரச்சாரத்திற்கு தயார் செய்யும் நடிகர் கட்சி.. எல்லா செட்டில்மெண்ட்டும் ஓவராம்

By Staff

சென்னை: தமிழ் சினிமா பிரபலங்களின் தாக்கம் தமிழ்நாடு அரசியலில் இருப்பது என்பது புதிதல்ல. அதேபோல் அரசியல் உள்ளீடுகள் சினிமாவில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதும் புதிதான விஷயம் கிடையாது. அப்படி பார்த்தால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், நடிகர்கள் மற்றும் நடிகைகள் அரசியல் கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

இதில் ஸ்டார் பேச்சாளர்கள் எல்லாம் உள்ளார்கள். இப்படி தமிழ்நாடு அரசியலில் பிரச்சாரத்திற்கு மட்டும் இல்லாமல், அரசியலில் நேரடியாக களமிறங்கிய நடிகர்கள், நடிகைகள் எல்லாம் கடந்த காலத்திலும் இருக்கிறார்கள், தற்போதும் உள்ளார்கள். இப்படி இருக்கையில் நடிகர் ஒருவரின் கட்சிக்கு வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட சொல்லி கோரிக்கைகளையும் உத்தரவுகளையும் நடிகர் பிறப்பித்து வருகிறாராம்.

Tamil Cinema Gossip Actor Party Ready To Face 2026 Tamilnadu Election With Actress Prapaganda

நடிகையை தயார் செய்து வரும் நடிகர் கட்சி: அதுவும் பெரிய அளவில் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர் நடிகைகளை அதிகம் டார்கெட் செய்து வருகிறார்களாம். அதிலும் நடிகர் கை காட்டிய நடிகர்கள் மற்றும் நடிகைகளைச் சந்தித்து பெரிய அளவில் தொகையைக் கொடுத்து அவர்களை பிரச்சாரம், செய்வதற்கு தயார் செய்து வருகிறதாம் அந்த நடிகர் கட்சியின் குழு. அதுவும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் நடிகையே சில நடிகர்களை சந்தித்து கன்வின்ஸ் செய்து வருகிறாராம்.

பெரிய பிளானில் நடிகர் கட்சி: இதற்காக மட்டும் நடிகர் கட்சி தரப்பில் இருந்து பல கோடிகள் செலவு செய்ய நடிகரும் மாநில பொறுப்பில் இருக்கும் ஒருவரும் தயாராக இருக்கிறார்களாம். இப்படியான ஆஃபர் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நம்பர் நடிகை, இந்த ஆஃபரை ஏற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல், செட்டில் மெண்டிலும் கொஞ்சம் பேரம் பேசி கேட்டு வாங்கி உள்ளாராம். இது மட்டும் இல்லாமல் தனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவருக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் வேண்டும் என்று எல்லாம் நடிகை கோரிக்கை வைத்து வருகிறாராம். மொத்தத்தில் நடிகர் கட்சி தேர்தலை எதிர் கொள்ள திட்டத்தின் மேல் திட்டம் தீட்டி வருகிறதாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X