இரண்டு மாசம் பொருங்க.. அது மட்டும் நடக்கட்டும்.. பணத்துக்காக மாஸ்டர் பிளான் போட்ட நடிகர்!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக தான் இருக்கிறார். நன்றாக சம்பளம் வாங்குகிறார். எப்படியாவது தனது தயாரிப்பாளருக்கு லாபம் தரவில்லை என்றாலும் நஷ்டத்தைக் கொடுப்பதில்லை. இப்படி இருக்கும்போது நடிகரின் செயல் அவரது ரசிகர்களை பணத்திற்காக பலிகடாவாக பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதாவது இந்த நடிகர் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரிலீஸ்க்கு முந்தைய வாரத்தில் புது படங்கள் ரிலீஸ் ஆகாது,ரிலீஸ்க்கு அடுத்த வாரத்திலும் படங்கள் ரிலீஸ் ஆகாது. அந்த அளவுக்கு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். நான் தயாரிக்க தயார், இத்தனை கோடிகளை சம்பளமாகக் கொடுக்கிறேன் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போடும் அளவுக்கு இவருக்கு மார்க்கெட் உள்ளது. ஆனால் நடிகரோ சினிமா எல்லாம் போதும், நாம் இனி அரசியல் சதுரங்கத்தில் கால் பதிக்க வேண்டிய நேரம் இது என்று முடிவெடுத்து அரசியலில் களமிறங்கி உள்ளார்.

Tamil Cinema Gossip Actor Wait For His Movie Release After He Decides His Political Alliance

அரசியல் சதுரங்கம்: இப்படி இருக்கும்போது, அவரது கட்சித் தொண்டர்களாக ரசிகர்களே மாறிவிட்டார்கள். ஒரு முறை அவரது பிரச்சாரத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால், மொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியது. இப்படி இருக்கும்போது, இதற்கு அரசியல் காரணங்கள் என்று நடிகர் கூறியதை அவரது கட்சி சகாக்களும் தீவிரமாக பரப்பினர். இது தொடர்பான விசாரணை தற்போது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சூரியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து, பூ கட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. இது மட்டும் இல்லாமல், இந்த விவகாரத்தில் நடிகரின் பெயர் டேமேஜ் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால், பூ கட்சி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாம். அதாவது, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தங்களுடன் கூட்டணிக்கு வரவேண்டும் என்றும், இந்த கூட்டணி மக்களவைப் பொதுத் தேர்தல் வரைக்கும் நீடிக்க வேண்டும் என்றும் கூறினார்களாம்.

நடிகர் முடிவு: நடிகரோ, இப்போதைக்கு இந்த நிபந்தனைகளுக்கு சரி என்று சொல்லாமல், எதுவாக இருந்தாலும், தனது படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். நடிகர் தங்களது கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று ஒரு சாரரும், கூட்டணிக்கு வர வாய்ப்பு குறைவுதான் என்று ஒரு சாரரும் பேசி வருகிறார்களாம். நடிகருக்கு இப்போதைக்கு தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர், இந்த அரசியல் சதுரங்கத்தால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அவர் லாபம் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறாராம். இது மட்டும் இல்லாமல் ஒரு வேளை பூ கட்சியுடன் கூட்டணிக்குச் சென்றாலும் தன்னைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார், இதனால் கூட்டணி சாத்தியமாகாது என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X