நடிகரின் நிதி நெருக்கடி.. சரியாக யூஸ் செய்து கொண்ட பிரபலம்.. கொள்கைகள் எல்லாம் காத்துல விட்டுட்டாரோ?
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் பெத்த நடிகர் தான். தென்னிந்திய சினிமாவில் பெரிய மார்க்கெட்டும் வைத்துள்ளார். அவரது படத்தில் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பலர், அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருக்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இந்த நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். இதைத் தெரிந்து கொண்ட ஒரு பணக்கார பிரபலம் ஒருவர், நடிகரை கிட்டத்தட்ட விலைக்கு வாங்கியது போல, தனது சௌகரியத்துக்கு ஆட வைத்துக் கொண்டு உள்ளாராம்.
சரி, நன்றாக இருந்த நடிகரின் படத்தை தயாரிக்க ஏன் தயாரிப்பாளர்கள் முன் வரமாட்டேன் என்கிறார்கள் என்று பார்த்தால், நடிகர் தனது மார்க்கெட்டுக்கு மீறிய சம்பளத்தைக் கேட்கிறார் என்பதுதான். இப்படி இருக்கும் போது நடிகர் தனது சமீபத்திய செயல்பாடு ஒன்றுக்காக ஸ்பான்சர்ஸ் கேட்டு பல தொழிலதிபர்களை நாடி உள்ளார். அப்போது ஒரு தொழிலதிபர் நடிகரின் நிலையை புரிந்து கொண்டு, நடிகருக்கு ஸ்பான்சர் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

பணக்கார புள்ளி: மேலும் நடிகர் எதிர்பார்த்த தொகையைவிட கூடுதலாகவே பணத்தைக் கொடுத்து நடிகர் மனதை குளிர்வித்து உள்ளார். இப்படி இருக்கும்போது நடிகரை தனது குளிர்பான விளம்பரத்தில் நடிக்கச் சொல்லி உள்ளாராம். நடிகரோ கடந்த 20 ஆண்டுகளாக எந்த விளம்பரத்திலும் நடிக்காமல் இருந்ததால், இப்போது இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஆகிவிட்டதே என்று, நெருங்கிய வட்டத்தில் புலம்பி வருகிறாராம். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தான் எந்த விளம்பரத்திலும் நடிக்காமல் இருந்ததே தனக்கான அங்கீகாரங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது விளம்பரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதே என்று நடிகர் புலம்பி வருகிறாராம்.
20 ஆண்டு கொள்கை: இது மட்டும் இல்லாமல், வேறு ஒரு விளம்பரத்தில் நடிக்கவும் நடிகர் ஒப்புக் கொண்டுள்ளாராம். அதற்கு காரணமே, தற்போது அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் ஒரு விஷயத்திற்கான அதிகப்படியான பணத் தேவை என்பதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











