சரக்கு பாட்டிலுடன் பாடகி வீட்டுக்கு போன நடிகர்.. அப்பறம் நடந்ததுதான் கூத்து.. வெரி வெரி Bad!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவே தற்போது நடிகர் ஒருவரின் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டு வருகின்றது. அவர் மீண்டு வந்துவிடுவார், என அவருக்கு வேண்டிய மற்றும் நெருங்கிய பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அந்த நடிகரின் நிலைமை ரொம்பவும் மோசமாக உள்ளது என்பதால், அவருக்கும் மிகவும் நெருக்கமான நடிகர், உடல்நிலையில் மோசமாக உள்ள நடிகரை பெர்சனலாக பார்த்துக் கொள்கின்றேன் என, தீவிரமாக கவனம் செலுத்தியும் வருகின்றாராம். இப்படி இருக்கும்போது, பிரபல பாடகி ஒருவர், அவரது உடல் நிலையைப் பார்த்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்றாராம்.

இந்த நடிகர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தமிழ்நாடு அரசியலிலும் தீவிரமாக செயல் பட நினைத்தவர். ஆனால் அவரது இந்த மோசமான உடல்நிலைக்கு காரணமே, அவருக்கு இருந்த கெட்ட பழக்கங்கள்தான் எனக் கூறப்படுகின்றது. தொடக்கத்தில் மதுவுக்கு மட்டும் பழக்கமாக இருந்த அந்த நடிகர் தற்போது வேறு பல தடை செய்யப்பட்ட போதைப் பொருளுக்கு எல்லாம் பழக்கமாகி, தற்போது அடிமையாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

அதன் விளைவாகத்தன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் ஒரு பேச்சு உள்ளது. இப்படியான நிலையில் பிரபல பாடகி ஒருவர் அந்த நடிகரின் உடல்நிலையைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், அந்த நடிகருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என நெருங்கிய வட்டாரத்தில் பேசி வருகின்றாராம்.

பாடகி: அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் இரவு, நடிகர் அந்த பாடகியின் வீட்டுக்கு சரக்கு பாட்டிலுடன் சென்று கதைவைத் தட்டியுள்ளார். யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் கதவைத் திறந்து பார்த்த பாடகி செம ஷாக்காகியுள்ளார். முதலில் அந்த பாடகியின் கணவர் குறித்து கேட்டுள்ளார், கணவர் வீட்டில் இல்லை எனத் தெரிந்து கொண்ட நடிகர் பாடகியை நோக்கி சரக்கு பாட்டிலை நீட்டியுள்ளார்.

கெட்ட வார்த்தை: மேலும் நான் உள்ளே வரவா எனவும் கேட்டுள்ளார். அதிர்ச்சியில் உறைந்த பாடகி, உள்ளே எல்லாம் வரவேண்டாம், எனக் கூறியது மட்டும் இல்லாமல், அந்த நடிகரை கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டியும் அனுப்பியுள்ளார். கணவர் வீட்டில் இல்லை எனத் தெரிந்ததும், நான் வரவா எனக் கேட்டவர்தான் அந்த நடிகர், மேலும் சரக்கு பாட்டிலை நீட்டியவர்தான் அந்த நடிகர், அப்படியான ஒருவர் இப்படி இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. இவையெல்லாம் நடக்கும் என நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என நெருங்கிய வட்டாரத்தில் பேசி வருகின்றாராம். நடிகரின் இந்த செயலைக் கேள்விப்பட்ட குடும்பத்தினர், இந்த வேலையெல்லாம் பார்த்தாயா என அவரைக் கேட்டு தாளித்து வருகின்றார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X