ஒரு காலத்தில் ஓவர் கும்மாளம் போட்ட நடிகர்.. இப்போ அடக்கி வாசிக்க காரணம் இதுதானாம்..

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவின் அனைத்து கிராஃப்ட்களையும் கரைத்துக் குடித்தவர். இளம் வயதில் இருந்தே சினிமாதான் கதி என இருக்கிறார். இவர் மீது பல நடிகைகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநரகளுக்கும் பல பிராதுகள் உள்ளது. காரணம், நடிகர் அந்த அளவுக்கு எல்லோரிடத்திலும் வம்பு இழுத்து வைத்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரொம்பவும் அடக்கி வாசித்து வருகிறார். அதற்கு ரொம்பவும் முக்கியமான காரணம் ஒன்று உள்ளதாம்.

அதாவது இந்த நடிகர் கால் ஷீட் கொடுத்துவிட்டு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கே செல்ல மாட்டார். வந்தாலும் பாதியிலேயே சென்றுவிடுவார். இயக்குநர்கள் படத்தை தங்களது திரைக்கதையில் இயக்க நினைத்தால், ஷூட்டிங் ஸ்பாட்டில் கதையை தனக்கு பில்டப் கொடுக்கும் படி எடுக்கச் சொல்லி கதையில் தலையிடுவாராம்.

Tamil Cinema Gossip Actor Who Changed Him Self After Some Life Lession Incidents

நடிகைகள் யோசிக்கும் அளவுக்கு: இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த நடிகருடன் ஒரு படத்தில் நடித்த நடிகை, மறுபடியும் அவருடன் இணைந்து நடிக்க பலமுறை யோசிப்பார்களாம். காரணம் நடிகரின் சேட்டைகள் அந்த அளவுக்கு இருந்துள்ளது. நடிகர், தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் க்ளோஷப் காட்சிகளில் தனது சேட்டைகளை அரங்கேற்றம் செய்து விடுவாராம். இதனாலே பல நடிகைகள் இவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது என்றாலே அவ்வளவு யோசிப்பார்களாம்.

சில்மிஷ வேலைகள்: புது முக நடிகைக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் நடிகையை தனியாக சந்திக்க வேண்டும், நடிகையை போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று, நடிகையை ஒரு வழி செய்துவிட்டுத்தான் படப்பிடிப்புத் தளத்திற்கே அழைத்து வருவாராம்.இப்படியான நடிகர் ஒரு கட்டத்திற்கு மேல் அதாவது கடந்த சில ஆண்டுகளாக தனது சில்மிஷ வேலைகள் மற்றும் சேட்டைகளை எல்லாம் அடக்கி வாசித்து வருகிறராம்.

மனம் மாற காரணம்: அதற்கு காரணம், இரண்டு விஷயங்களைக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அதாவது கொரோனா காலத்தில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து போனதும் நடிகரின் அப்பா உடல்நிலை முடியாமல் தனது கடைசி காலத்தில் இருப்பதும் நடிகரின் மனநிலையை மொத்தமாக மாற்றிவிட்டதாம். எனவேதான் நடிகர் முன்புபோல சேட்டைகள் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருக்கிறாராம். நடிகர் இப்படி இருப்பதால், படத்தை அவரது கால் ஷீட்டுக்கு முன்னதாகவே முடித்துக் கொடுத்து விடுகிறாராம். இதனால் நடிகர் மீது சினிமா வட்டாரத்தில் பாசிடிவ் செய்திகள் தான் அதிகம் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X