புஷ்பா புருஷனாக மாறிய நடிகர்.. எப்படி இருந்த மனுஷன்.. எல்லாம் ஆசை படுத்தும் பாடு!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் உள் நுழையும்போதே பார்ன் வித் சில்வர் ஸ்பூன் எனக் கூறும் அளவுக்கு உள்ளே நுழைந்தவர் தான். முதல் படமே பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றிப் படமாக மாறியது. இது மட்டுமல்லாமல், நடிகரும் அந்த முதல் படம் அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. இதற்கிடையில் இவரது படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போன நடிகராக அவர் மாறினார்.

நடிகர் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே காதலில் வேரூன்றி இருந்தார். சினிமாவில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே காதலையை ஊர் அறிய கைபிடித்தார். ஆனாலும் அவருக்கு திரையுலகிலும் ரசிகைகளும் என பெரும் பெண்கள் பாட்டாளமே நடிகரைக் கண்டால் கொள்ளு வடித்துக் கொண்டு இருந்தார்.

பல முன்னணி நடிகைகள், இயக்குநர்கள் உடன் இணைந்து நடித்த இந்த நடிகர் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைக் குவிக்கும் நடிகராக மாறினார். இது மட்டுமல்லாமல் இவருக்கு படங்கள் வெற்றி கொடுத்ததைப் போல திருமண வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் அடுத்தது மகிழ்ச்சிகளை அவருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

Tamil Cinema Gossip Actor Who Criticized As Pushpa Purusan After He Left His Wife

முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை: கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இல்லற வாழ்க்கையில் இருந்த நடிகர், திடீரென மனைவியை விட்டுப் பிரிந்தார். இவரது இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது இப்படி இருக்க திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற காரணமே நடிகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கம் தான் எனக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம். விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எப்படித்தான் அந்த பொண்ணையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போக நடிகருக்கு மனசு வந்துச்சோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புஷ்பா புருஷன்: மனைவியை விட்டுப் பிரிந்த பின்னர் நடிகர் தனக்கு நெருக்கமான பெண்ணுடன் ஓவராக ஊர் சுற்றி வருகிறாராம். குறிப்பாக அந்த பெண் எங்கு சென்றாலும் உடன் செல்வது, அவர் சொல்லும் எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்கிறாராம். இது குறித்து தெரிந்து கொண்டவர்களோ, இந்த பெண்ணுக்கு பார்த்து பார்த்து செய்யும் விஷயங்களை மனைவிக்கு பார்த்து பார்த்து செய்திருக்கலாமே என கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் நடிகரை அந்த பெண் நடத்துவது குறித்து கேள்வி பட்டவர்களோ, எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆசைக்கு பலியாகி புஷ்பா புருஷன் மாதிரி மாறிட்டாரே என பேசிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X