நடிகை சொல்லை தட்டாமல் செய்யும் நடிகர்.. மனைவியை விரட்டி விட்டதுக்கு காரணமே அந்த மேட்டர்தானம்!

By Staff

சென்னை: இந்த நடிகர் ஒரு பெரிய இடத்து வாரிசுதான். சினிமாவில் இவர் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகிப் போனார். காதல் திருமணம் தான் என்றாலும், நடிகரின் திருமண புகைப்படங்களைப் பார்த்தால் ஏதோ குழந்தை திருமணமோ என்ற சந்தேகம் கூட வரலாம். அந்த அளவுக்கு இருப்பார். பெரிய இடத்து மாப்பிள்ளை ஆன பின்னர், நடிகரின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் இருந்தது. ஆனால் இன்றைக்கு நடிகரின் எல்லா நகர்வுகளுக்கு பின்னாலும் ஒரு நடிகை இருக்கிறாராம்.

அதாவது நடிகர் கோலிவுட்டில் மட்டும் இல்லாமல், அடிக்கடி டோலிவுட், பாலிவுட் என அங்கேயும் தலையை காண்பித்து வருகிறாராம். நடிகர் பாலிவுட்டுக்கு போனபோது, நடபெற்ற ஒரு பார்ட்டியில் தான் இந்த நடிகையை சந்தித்துள்ளார். முதல் சந்திப்பே அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பாக மாறியதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டுள்ளது. அதாவது நடிகர் தனது படப்பிடிப்புத் தளத்திலேயே சில போதை பொருட்களை வைத்திருப்பாராம். அதுவும் தனது மேனேஜர் மூலம் வெளிநாட்டில் இருந்து ரகசியமாக எப்படியாவது இறக்கிவிடுவராம்.

Tamil Cinema Gossip Actor Who Divorce His Wife For Starts New Relationship With Actress

நடிகையுடன் நெருக்கம்: இப்படி இருக்கும்போது அந்த பார்ட்டியில் நடிகைக்கு நடிகர் அந்த போதைப் பொருளை ஷேர் செய்ய, இருவரும் போதையில் ஒருவரை ஒருவர் ஷேர் செய்து கொண்டதாக பேச்சு உள்ளது. இதில் இருந்துதான் நன்றாக இருந்த நடிகரின் குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகளும் குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளதாம். நடிகர் கோலிவுட் இல்லாமல் டோலிவுட் மற்றும் பாலிவுட்டுக்கு சென்றால், நடிகையுடன் தான் எப்போதும் இருப்பாராம். நடிகர் அங்கு இருக்கும் போது, இருவரின் கால்ஷீட் ஷெட்யூலும் ஒரே மாதிரி இருக்கும் படி பார்த்துக் கொள்வார்களாம்.

விவாகர்த்து முடிவு: கோலிவுட்டில் இருவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டு இருந்தால் பெயர் கெட்டுப்போகும், அதனால் சந்திப்புகள் எப்போதும் ரகசியமாக இருப்பதே சரி என்று நடிகர் தெரிவித்துள்ளாராம். ஒரு கட்டத்தில் நடிகை நடிகரிடம் இருவரும் இணைந்து வாழலாம் என்று சொல்லி உள்ளார். நடிகரும் நடிகை மீது இருந்த மோகத்தால் நடிகையின் பேச்சை தட்டிக் கழிக்க முடியவில்லையாம். இது மட்டும் இல்லாமல், நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளாராம். இருவரும் விரைவில் தங்களுக்கு இடையிலான உறவை அறிவிக்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டவர்கள், இவ்வளவு மோசமானவரா நடிகர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X