மனைவியைக் கழட்டிவிட்டு புதுக்காதலி.. இப்போ புதுக்காதலியையும் கழட்டிவிட்டுட்டு புதுஜோடி சேர்ந்த நடிகர்

By Staff

சென்னை: இந்த நடிகரைப் பற்றிய பேச்சு, சமூக வலைதளங்களில் குறைந்துவிட்டால், அவரே எதாவது செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். சினிமாவில் பெரிய நடிகராக வலம் வர முயற்சித்துக் கொண்டுள்ள இந்த நடிகர் சர்ச்சையிலேயே மிகப்பெரிய பிரபலமாக மாறிவிடுவார் எனும் அளவிற்கு, பல தில்லாலங்கடி வேலையைப் பார்த்து வருகின்றார். இப்படியான நிலையில் இவர் தற்போது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்தை மறைத்துத்தான் இண்டஸ்ட்ரிக்குள் வலம் வந்து கொண்டு இருந்துள்ளார். மனைவியும் காதல் கணவன், உத்தமனாக இருப்பார் என நம்பி, வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்துள்ளார். ஆனால் வெளியே வந்த நடிகர், தன்னை ஒரு காதல் மன்னனாக நினைத்துக் கொண்டு பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கு நூல் விட்டுக்கொண்டு இருந்துள்ளார். இவரது திருமணக் கதை குறித்துத் தெரிந்து கொள்ளாத இளம் நடிகை, நடிகரின் பேச்சுக்கு அடிமையாகி, கடைசியில் அவருக்கே அடிமையாகிவிட்டார்.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

இப்படியான கட்டத்தில் மனைவிக்கு இந்த விஷயம் தெரியவர, பெரிய பிரச்னையே செய்துள்ளார். ஆனாலும் நடிகரிடம் தன்னை இழந்த அந்த இளம் நடிகை, நடிகருடன் இருக்கவே முடிவு செய்தார். இருவரும் ஒன்றாக இருப்பது, எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது, ஒரே வீட்டில் ஆண்டுக் கணக்கில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருந்துள்ளனர். இப்படியான நிலையில், அந்த நடிகர், தனது, கோர முகத்தினை நடிகையிடம் காட்ட, நடிகை அடிக்கடி நடிகருடன் சண்டை போடுவதும், கெஞ்சுவதுமாக இருந்துள்ளார்.

நடிகர்: இப்படியான நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் ஒரே ப்ராஜெக்ட்டில் இணைந்து பணியாற்ற புறப்பட்டார்கள். இதில் அந்த நடிகரின் ஈடுபாடு திருப்திகரமாக இல்லை என அவரை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். எப்போதும் நடிகையோடு அந்த நடிகர் இருந்து கொண்டே இருந்ததால், நடிகையால் சுதந்திரமாக எதுவுமே செய்யமுடியாமல் இருந்துள்ளது. இப்போது அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து நடிகரை கழட்டிவிட்டதால், நடிகரும் கோபத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பிரேக் அப் : நடிகை அட்டகாசமாக பணியாற்றி, ஸ்கோர் செய்ததால் அவரது போர்ஷனை முழுவதுமாக முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். நடிகையின் போர்ஷன்கள் முடிய கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் நடிகை தனது கடந்த காலங்கள் குறித்து அதிகம் யோசித்து நடிகரை பிரேக் அப் செய்து விடலாம் என தீர்க்கமாக முடிவு எடுத்துள்ளார்.

புது காதலி: ப்ராஜெக்ட் முடிந்ததும், நடிகரின் வீட்டிற்குச் சென்று, ப்ரேக் அப்பினைச் சொல்லி, நடிகருக்கு ஷாக் கொடுக்கலாம் என நினைத்துச் சென்ற நடிகைக்கு, அங்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, நடிகர் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதலில் இருப்பதாக, அந்தப் பெண்ணை நடிகைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும், நடிகரை கண்டபடி திட்டிவிட்டு, தனது ப்ரேக் அப்பினைச் சொல்லிவிட்டு வந்துள்ளார் நடிகை. இப்போதுதான் நிம்மதியாக இருக்கின்றது என நெருங்கிய வட்டத்தில் சொல்லி வருகின்றாராம். இதனைக் கேள்விப்பட்ட சிலர், முதல் மனைவியின் சாபம் சும்மா விடுமா எனவும், சிலர் இப்படி பெண்களை ஏமாற்றுபவன் எனத் தெரிந்தும் எப்படி பெண்கள் ஏமாறுகின்றார்கள் என சிலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X