ஏன்டா அரசியலுக்கு வந்தோம்னு புலம்பும் நடிகர்.. பேருக்குத்தான் தலைவராம்.. மத்தபடி அவரு டம்மி பீஸ்ஸாம்
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் ஆசை ஒருவருக்கு வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். மத்தபடி உச்சநடிகராக இருந்த நடிகர் ஒருவர் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி டீசெண்ட்டாக அரசியல் செய்கின்றேன் என தனது ரசிகர்களைத் திரட்டிக் கூறியுள்ளார். ரசிகர்களும் அவரது பேச்சினை நம்பி தமிழ்நாடு முழுவதும் அவருக்கு போஸ்டர்கள் ஒட்டுவது, கொடிக்கம்பங்கள் நடுவது என தீவிரமாக தடபுடலாக செலவு செய்துள்ளனர். இப்படியான நிலையில் கட்சிக்குள் இருக்கும் சிலருக்கு தலைவர் டம்மி போலயே என பேசி வருகின்றார்களாம். அது குறித்து இதில் காணலாம்.
உச்சநடிகராக இருந்த அவர் தமிழ்நாடு அரசியல் களத்தினை மாற்றுகின்றோம் என்ற பெரும் முழக்கத்துடன் அரசியலில் குதித்தவர். அவரது ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் கவனத்தினை ஈர்த்தார். ஏற்கனவே ஒரு நடிகர் அரசியலுக்கு வருகின்றேன் எனக் கூறிவிட்டு, நம்ம பாடி தாங்காதுப்பா என வந்த வழியில் அப்படியே திரும்பி நடையைக் கட்டிவிட்டார். அதேபோல் இன்னொரு நடிகரோ, அரசியல் மேடைகளில் புரியாமல் பேசிக்கொண்டு இருந்தார். அப்படி இருக்கும்போது, சமீப காலமாக அவர் யாரை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கினேன் எனக் கூறினாரோ அவர்களுடன் இப்போது ரொம்பவும் இணக்கமாகிவிட்டார்.

இப்படியான நிலையில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கியவர்தான் அந்த நடிகர். அந்த நடிகர் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர், ஏற்கனவே உள்ள கட்சிகள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசியல் களத்தையே சூடு பிடிக்கச் செய்வார் என கம்பி சுற்றிக்கொண்டு இருந்த அவரது ரசிகர்களுக்கே பல்பு கொடுத்துவிட்டார் அந்த நடிகர். யார் மீதும் குற்றச்சாட்டு இல்லை, மக்கள் பிரச்னையை பேசுவதில்லை, முக்கியமாக களத்திற்கு வருவதே இல்லை என்றெல்லாம் அவர்மீதுதான் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
ஆட்டிடூயூட்: மாற்றுக் கட்சிக்காரர்கள்தான் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால், தனது சொந்தக் கட்சிக்காரர்களே இப்போது அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக, கட்சித் தலைமையில அவரது நம்பிக்கையைப் பெற்ற ஒருவருக்கு முக்கிய பதவியைக் கொடுத்து வைத்துள்ளார். கட்சி தொடங்கிய புதிதில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதைச் செய்து வந்த அவர், இப்போது ரொம்பவே ஆட்டிடூயூட் காட்டுகின்றாராம். அதுவும் தான் தமிழ்நாட்டில் எங்கு வந்தாலும் தனது முகத்தைத்தான் மிகப்பெரிய அளவில் பேனரில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிர்வாகிகளிடம் கூறுகின்றாராம்.
ஏமாற்றம்: இதெல்லாம், பிடிக்காத நிர்வாகிகள் கட்சிக்குள் போர்ர்கொடி தூக்கியுள்ளார்கள். ஆனால் அதைக் கூட கண்டுகொள்ளாமல், அந்த நடிகர் படப்பிடிப்பில்தான் பிசியாக உள்ளாராம். தன் மீது விமர்சனங்களை வைத்துள்ள நிர்வாகிகளை தலைமை அலுவலத்தில் மீட்டிங்கிற்கு வரச்சொல்லி தலைமையில் இருந்து கடிதம் பறந்துள்ளது. நடிகர்தான் அழைக்கின்றார் என நம்பிச் சென்ற நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். காரணம், அந்த மீட்டிங்கிற்கும் நடிகர் வரவில்லையாம்.
டம்மி பீஸ்: இதெல்லாம், பிடிக்காத நிர்வாகிகள் கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ஆனால் அதைக் கூட கண்டுகொள்ளாமல், அந்த நடிகர் படப்பிடிப்பில்தான் பிசியாக உள்ளாராம். தன் மீது விமர்சனங்களை வைத்துள்ள நிர்வாகிகளை தலைமை அலுவலகத்தில் மீட்டிங்கிற்கு வரச்சொல்லி தலைமையில் இருந்து கடிதம் பறந்துள்ளது. நடிகர்தான் அழைக்கின்றார் என நம்பிச் சென்ற நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். காரணம், அந்த மீட்டிங்கிற்கும் நடிகர் வரவில்லையாம். இதனால் மனமுடைந்த நிர்வாகிகள், இந்த கட்சிக்கு யார் தலைவர்? உண்மையாலுமே அந்த நடிகர்தான் தலைவரா? இல்லை அந்த நடிகர் ஒரு டம்மி பீஸா என புரியாமல் புலம்பிக்கொண்டு இருக்கின்றார்களாம். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டாவது அந்த நடிகர் தனது நடவடிக்கைளை மாற்றிக் கொள்வாரா என நிர்வாகிகள் மிகவும் ஏக்கத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











