நடிகையுடன் ஏடாகூட சகவாசம்.. ஆதாரத்துடன் நடிகரை மொத்தமாக முடித்துவிட பிளான் போட்ட பெண் பிரபலம்
சென்னை: இந்த நடிகர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது மிகவும் பவ்யமாக இருந்துள்ளார். ஆனால் சில படங்களுக்குப் பின்னர், நடிகர் தன்னுடன் நடித்த நடிகைகள், துணை நடிகைகள் என பலரிடமும் ஓவர் சேட்டை செய்வாராம். அதுவும் நடிகை என்றால் சொல்லவே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நடிகையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல நடந்து கொள்ளத் தொடங்கி உள்ளார்.
அதாவது, நடிகர் தன்னுடன் நடித்த நடிகைகளை நேரடியாகவே அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைப்பாராம், அதுவும் படத்தில் துணை நடிகையாக வந்தவர்களில் நடிகருக்கு யாராவது மேல் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டால் நடிகரின் ஆசையை அடக்குவது சிரமாம். தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, தான் நினைத்ததை முடித்து விடுவாராம். இந்த நடிகரின் நச்சரிப்பால், சினிமாவில் இருந்து மொத்தமாக ஓடிப் போனவர்கள் எல்லாம் இருக்கிறார்களாம்.
நடிகரின் இந்த மோசமான குணம் குறித்து மொத்த திரையுலகத்திற்குமே தெரிந்திருக்க, வெளியூர் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர் பெற்றோர். அப்படி இருந்தும் நடிகர் தனது திருமணத்திற்குப் பிறகுதான் ஓவர் ஆட்டம் போட்டுள்ளார். அதுவும் நடிகருக்கு படங்கள் வெற்றி மீது வெற்றியாக மாற, தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தனி மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யச் சொல்வாராம்.

ஆதாரம்: இப்படி இருக்கையில் நடிகரின் இந்த ஆட்டம் அவரது மனைவிக்கு தெரியவர, நடிகருடன் இது தொடர்பாக சண்டை போட்டு எல்லாவற்றையும் இத்துடன் விட்டுவிட்டு வாழ்க்கையை நல்லபடியாக வாழ எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் நடிகரோ அதெல்லாம் முடியாது என்று வசனம் பேச, நடிகரின் மனைவியோ நடிகரும் நடிகை ஒருவரும் நெருக்கமாக இருந்தது தொடர்பான சில ஆதாரங்களை கைப்பற்றி விட்டாராம். அதுவும் நடிகருக்குத் தெரியாமலேயே டிடெக்டிவ் டீமை நியமித்து, நடிகருக்கு எதிரான ஆவணங்களை உருவாக்கி உள்ளாராம் நடிகரின் மனைவி.
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்?: இது தொடர்பாக நடிகரிடம் கூறினால் தொடக்கத்தில் அமைதியாக இருந்த நடிகர், மீண்டும் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகையுடன் நடிகர் ஏடாகூட சகவாசத்தில் இருப்பது தொடர்பான ஆதாரங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











