கஷ்டத்தில் நடிகர்.. கழட்டி விட்டுட்டு போன சினிமா நண்பர்கள்.. நட்பை உயர்வாக பேசுபவருக்கே இப்படியா?

By Staff

சென்னை: இந்த நடிகர் என்றாலே நட்பு.. நட்பு என்றாலே இந்த நடிகர் என்ற பேச்சு இன்றைக்கும் திரையுலகில் உள்ளது. இவர் இப்போது அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். இதனால் அவரது கால் ஷீட்க்காக பல தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்கள். இப்படி இருக்கும்போது அந்த நடிகர் கடனில் மூழ்கிய போது அவரது சினிமா நண்பர்களே அவரை கழட்டி விட்டுட்டு ஓடிவிட்டார்களாம்.

இந்த நடிகர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையாக வளர்ந்தவருக்கு சினிமா மீது தனி ஈர்ப்பு சிறு வயதில் இருந்தே இருந்துள்ளது. இதனால் தனது சிறு வயதுக் கனவை அடைய சினிமாவில் தானே கதை எழுதி, இயக்கி, தயாரித்து, நடிக்கவும் செய்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. அதன் பின்னர் அந்த நடிகர் பல படங்களில் நடித்தார்.

கடனால் கஷ்டம்: அதில் சில படங்கள் வெற்றிப் படங்களாக மாறியது. சில படங்கள் அடுத்தடுத்து தோல்விப் படங்களாக மாற நடிகர் பெரிய கடனில் சிக்கிக் கொண்டார். இதனால் இதுவரை அவருக்கு இருந்த நண்பர்கள், நடிகர் கடனில் மூழ்கியதும் நடிகரை கழட்டி விட்டுவிட்டு ஓடியுள்ளார்கள். அந்த காலகட்டத்தை கடக்க நடிகர் மிகவும் சிரமப்பட்டு உள்ளார்.

Tamil Cinema Gossip Actor Who Felt Bad About Friends They Din t Stood When He Struggles Loans

கைவிட்ட நண்பர்கள்: சென்னையில் இருந்த அவர் மொத்தமாக காலி செய்துவிட்டு தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார். கடனை எல்லாம் சரி செய்ய யாராவது தனக்கு உதவிட மாட்டார்களா என ஏங்கி உள்ளார். ஆனால் அவர் யாரை எல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லாம், அவன் கிட்ட போனா, நாமளும் சேர்ந்து கடனாளி ஆகி விடுவோம் என நடிகர் இருக்கும் பக்கமே வராமல் இருந்துள்ளார்கள்.

நிம்மதியிலும் வேதனை: ஒரு வழியாக நடிகர் எப்படியோ தனது கடன்களை எல்லாம் அடைத்து விட்டார். இப்போது, அவரது தலையை தின்னும் அளவுக்கு கடன் எதுவும் இல்லாததால் நடிகர் இப்போது நல்ல நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் படங்களும் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கிறது. அவரது கால்ஷீட் கேட்டு பல தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் நடிகர் இன்றைக்கு வெற்றியில் இருந்தாலும் அவர் யோசிப்பது, நாம் கஷ்டத்தில் இருந்த போது எந்த நண்பனும் நமக்கு வந்து உதவவில்லையே என்றுதான் யோசித்து வருகிறாராம். இதைத் தெரிந்தவர்கள், நட்பு என்றாலே அந்த நடிகர் தான் எனக் கூறும் அளவுக்கு இருந்த நடிகருக்கு, கஷ்டத்தில் உதவ யாருமே இல்லையா என்று கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X