இத்தோட முடுச்சுக்கலாம்.. இனிமேல் தொல்லை பண்ணக்கூடாது.. நச்சரிக்கும் நடிகரிடம் ரெக்வொஸ்ட் வைத்த நடிகை!
சென்னை: இந்த நடிகர் எப்போதுமே ஒரு சக்சஸ் வந்துவிட்டால் அந்த சக்சஸில் தன்னுடன் இருப்பவர்களை அப்படியே அள்ளி அடுத்த படத்திலும் நடிக்க வைப்பாராம். இது குறித்து யார் என்ன சொன்னாலும் கவலைப் படமாட்டாராம், குறைந்த பட்சம் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையையாவது அடுத்த படத்திற்கு கமிட் செய்வாராம். இப்படியான நடிகரின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தவிக்கிறாராம் ஒரு நடிகை.
இந்த நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து இங்கு நடிக்க வந்தவர். வந்தவருக்கு தமிழ் சினிமா கொடுத்த வரவேற்பில் நடிகை இப்போது தென்னிந்திய சினிமாவிலேயே கவனம் பெறும் நடிகையாக மாறியுள்ளார். இந்த நடிகையின் மீது அந்த நடிகருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் இருந்துள்ளது. அப்படி இருக்கும்போது நடிகையை ஒரு படத்தில் எப்படியோ கமிட் செய்துள்ளார். அதன் பின்னர், நடிகர் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்துள்ளார்.
நடிகரின் பிளான்: இது குறித்து எப்படியோ தெரிந்து கொண்ட, நடிகை நடிகரிடம் முடிந்த அளவுக்கு கறக்கலாம் என்று முடிவு செய்து நடிகருடன் சில படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இப்படி இருக்கும் போது ஏற்கனவே நடிகருடன் நடிகை இரண்டு படங்களில் நடித்து விட்டார். அதில் ஒரு படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் அவரை தனது அடுத்த படத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

தனிமையில் மீட்டிங்: இதனால் நடிகர் நடிகையிடம் பேசியுள்ளார். அப்படி பேசும்போது நடிகை நடிகரை தனியே சந்தித்து பேசலாம் எனக் கூறியுள்ளார். அப்படி கூறும்போது நடிகரும் ஓ.கே. எனக் கூறியுள்ளார். நடிகரும் நடிகையும் சந்தித்து பேசியபோது நடிகரிடம் நடிகை ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். அதாவது இதுதான் கடைசி படம், இதுக்கு மேல என்னை தொந்தரவு செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார். நடிகரோ, படமெல்லாம் ஓ.கே. மேற்படி விஷயங்கள் எல்லாம் இருக்கே அதற்கு என்ன செய்ய என்று புலம்பினாராம்.
மிரட்டல்: நடிகரின் இந்த உள்ளுணர்வை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை நடிகரை மிரட்டி விட்டுவிட்டு இனிமேல் படத்தில் நடிக்க கூப்பிடுகிறேன் என போன் செய்தால் மானத்தை வாங்கி விடுவேன் எனக் கூறினாராம். அதன் பின்னர் எப்படியோ நடிகையிடம் பேசி இந்த படத்தில் மட்டும் நடிக்க வைக்க சம்பந்தம் வாங்கியுள்ளார். நடிகையும் அதற்கு பின்னர் தன்னை மீண்டும் படத்தில் நடிக்கச் சொல்லி நச்சரிக்க கூடாது எனக் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











