அந்த டிவி ஹீரோ என்னோட 2 வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டான்.. திடீரென பொங்கிய இயக்குநர்.. அவர் தானா?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கும் விஷயம், யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்பதுதான். ஒரு வெற்றி வந்த பின்னர் ஒரு நடிகரோ, நடிகையோ அது யாராக இருந்தாலும், அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயரத்தில் மிதப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படியான வெற்றி மிதப்பில் தான் ஒரு நடிகர் நடந்துகொண்ட விதம் இயக்குநர் ஒருவரை மிகவும் பாதித்துள்ளது.

இந்த நடிகர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் வெள்ளித்திரைக்கு வந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இவரது பெயரோடு அந்த சின்னத்திரை இப்போதும் ஒட்டிக் கொண்டுதான் உள்ளது. இந்த நடிகர் வர வர தமிழ் சினிமாவையே தனக்கு பட்டா போட்டு கொடுத்தது போன்ற எண்ண ஓட்டத்தில் தான் இருக்கிறாராம். இதனால் பல முத்த நடிகர்களையே பல இடங்களில் உரிய மரியாதையுடன் நடத்துவதில்லையாம்.

பஞ்சாயத்து என்னவென்றால், புது முக இயக்குநர் ஒருவர் நடிகரைச் சந்தித்து, தன்னிடம் இருந்த கதையை சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட நடிகருக்கு கதை ரொம்பவும் பிடித்துவிட்டது. இப்படி இருக்கும்போது, இயக்குநரிடம் கதை எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது, ஆனால் படத்தின் திரைக்கதையை என்னுடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் மாற்றலாம் என்று கூறியுள்ளார். இயக்குநரும் இதற்கு ஓ.கே. சொல்லியுள்ளார். இதனால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து படத்தின் திரைக்கதையில் சில பல மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

Tamil cinema Gossip Actor Who From TV Spoils Debut Director Two Years Life

வெற்றி மமதை: இப்படியான நிலையில் நடிகரின் படம் ஒன்று வெளியாகி பிரமாண்டமான வெற்றியைக் குவித்துள்ளது. இந்த தருணத்தில் நடிகரிடம் கால் ஷீட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் சென்றுள்ளார்கள். வெற்றியின் மிதப்பில் இருந்த அந்த நடிகர், தயாரிப்பாளரைப் பார்த்ததும் அமரச் சொல்லியுள்ளார். இயக்குநரைப் பார்த்ததும், யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். இது இயக்குநருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன் பின்னர் நான் உங்களுக்கு கதை சொல்லியுள்ளேன், நீங்கள் கதையில் சில விஷயங்களை மாற்ற சொன்னீர்கள் என்று கூறியுள்ளார்.

திமிர்: அதற்கு நடிகரோ, எனக்கு கதை மறந்துவிட்டது, அந்த கதையை மறுபடியும் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இயக்குநரும் கதையைச் சொல்லியுள்ளார். அதன் பின்னர் சில காட்சிகளை நடித்துக் காட்டச் சொல்லியுள்ளார், இயக்குநரும் நடித்துக் காட்டியுள்ளார். அதன் பின்னர் வேறு எதையோ அவர் செய்யச் சொல்ல, அதை இயக்குநர் செய்ய மறுத்துள்ளார். அதன் பின்னர் அந்த நடிகரோ, அந்த இயக்குநரைப் பார்த்து, நீ சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டாய், You are Unfit For Cinema என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த படமும் கைவிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் வீண்: தயாரிப்பாளரோ, அந்த நடிகர் இருந்தால் படத்தை எடுக்கலாம், இல்லை என்றால் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அந்த இயக்குநரோ, ஏமாற்றத்தோடு கண்ணீர் சிந்திக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த இயக்குநர், தனது படத்தின் கதையை வேறு ஒருவருக்கும் சொல்லி, அதை படமாகவும் எடுத்துவிட்டார். படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர், இந்த டிவி நடிகரின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X