தொழிலை மாற்றிய நடிகரின் அம்பலமான 6 மணி ரகசியம்.. சவால் விடுறவங்க வாயை மூட கைமாறும் பெட்டிகள்
சென்னை: இந்த நடிகர் சினிமாவிலேயே நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருந்தவர் தான். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி ஒரு நடிகராகவும் கதாநாயகனாகவும் வெற்றி பெற வைக்க அவரது அப்பா போடாத குட்டிக்கரணம் இல்லை. முதலில் அப்பாவின் பேச்சைக் கேட்டு நடித்து வந்த நடிகருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகிறிய மவுசால், கொஞ்சம் மமதையில் மெல்ல மெல்ல ஆட்டம் போட ஆரம்பித்தார்.
அதாவது நடிகர் தனது அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட்டுவிட்டு, தனது உதவியாளர் மற்றும் மேனேஜர் என இருவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். நடிகரும் பல கோடிகள் சம்பளமாகப் பெறுபவர். இதில் வெள்ளைப் பணமாக வாங்கும் பணத்தை அவரது வங்கிக் கணக்கிலேயே வாங்கிக் கொள்வாராம். ஆனால் கருப்பு பணமாக வருவதை தனது உதவியாளர் மற்றும் மேனேஜர் வசம் ஒப்படைக்க சொல்லி உள்ளார். நடிகரின் பினாமியாக அவர்கள் இருவரும் நடிகருடனே எப்போதும் இருக்கிறார்களாம்.
இப்படி இருக்கையில் நடிகரிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது அவரது உதவியாளரும் மேனேஜரும் வேறு ஒரு தொழிலில் கவனம் செலுத்தினால் இதைவிட நல்ல லாபம் பார்க்கலாம், அதிக வருமான பார்க்கலாம் என்று எல்லாம் கூறி உள்ளார்கள்.

புதிய தொழில்: நடிகரும் இவர்களின் பேச்சைக் கேட்டு, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைபோல நடிகர் தொழிலை விட்டுவிட்டு புதிய தொழில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார். அபிமான நடிகர் தான் தொடங்கிய தொழில் குறித்து ரசிகர்களிடம் கூற, நடிகரின் தொழிலுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் நடிகரின் தொழிலில் பாட்னர் ஆகச் சேர முடிவு செய்து பல கோடிகளை நடிகருக்கு கருப்பு பணமாகவே கொடுத்துள்ளனர்.
விளம்பரம்: நடிகரும் அவரது 200க்கும் மேற்பட்ட பாட்னர்களும் தொழிலை பெரியதாக மாற்ற வேண்டும் என்று யோசித்து, நடிகரை தொழிலின் விளம்பரத்திற்காக தங்களது ஊர்களுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் தொழிலை விளம்பரம் செய்ய வந்தாலும், 6 மணிக்கு மேல் விளம்பர நிகழ்ச்சிகளை கமிட் செய்வது இல்லையாம். இது தொடர்பாக ஆரம்பத்தில் சில பேச்சுக்கள் அடிபட்டாலும், நடிகரின் தொழில் வளர வளர இது தொடர்பான பேச்சுக்களும் அதிகமாகி உள்ளது. நடிகரும் அதற்கு ஏற்ற வகையில் 6 மணிக்கு மேல் வெளியே வருவது இல்லையாம்.
6 மணி ரகசியம்: அதற்கு காரணம் நடிகரால் 6 மணிக்கு மேல் ஆல்கஹால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சிலர் நேரடியாகவே விமர்சித்து வருகிறாரகள். நடிகரின் இந்த 6 மணி மேட்டர் குறித்து தெரிந்து கொண்டு, அது குறித்து பேசுபவர்கள் வாயை மூட நடிகர் தரப்பில் இருந்து பெட்டிகள் கை மாறி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











