மனைவியை சூடாக்க தோழியுடன் அடிக்கடி வெளியே போகும் நடிகர்.. இப்பத்தான் செம நிம்மதியாம்!

By Staff

சென்னை: இந்த நடிகர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் தான். அதுவும் காதல் திருமணம். மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகர் இவர். இவரது இல்லற வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்துள்ளது. ஆனால் போக போக கொஞ்சம் சண்டையும் சச்சரவுமாக போக நடிகருக்கு காதல் மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பு தற்போதைய அவரது நிலைக்கு காரணமாகிவிட்டது என்கிறார்கள்.

அதாவது நடிகர் காதல் மனைவியைத் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று இருந்துள்ளார். ஆனால் நடிகரின் காதல் மனைவியோ குடும்பப் பொறுப்புகளை தான் கவனித்துக் கொள்கிறேன் என்று நடிகரின் சம்பள விஷயத்தில் தலையிட ஆரம்பித்து, நடிகரின் சம்பளம் நேரடியாக தனது அக்கவுண்டுக்கு வரும்படி வழிவகை செய்துள்ளார்.

Tamil Cinema Gossip Actor Who Going Out With His New Girlfriend For Make Tension His First Wife

பிரச்னை: தொடக்கத்தில் இதை எல்லாம் நல்லது என்று நினைத்த நடிகருக்கு அதனால் தனது சொந்த செலவுக்கு கூட பணம் இல்லாத சூழ்நிலை வந்து விட்டதே என்று பலமுறை நினைத்து அழுதுள்ளாராம். அதுவும் அவரது நண்பர்கள் மத்தியில் இதனால் பலமுறை கூனிக் குறுகி விட்டாராம்.

விவாகரத்து முடிவு: இது தொடர்பாக மனைவியிடம் பேச ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிரச்னைக்கு நடிகரின் மாமியார் தீர்வு சொல்கிறேன் என்று புருஷன் பொண்டாட்டி பிரச்னைக்குள் உள் நுழைய குடும்பம் இரண்டாக உடைய அதுவே காரணமாக மாறிவிட்டதாம். இன்னும் சொல்லப்போனால் நடிகர் விவாகரத்து முடிவு எடுக்க காரணமே மாமியாரின் அடிக்கடி தலையீடு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

புதுத் தோழி: இந்நிலையில் தனது மனைவியுடன் வாழ விருப்பம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நடிகருக்கு தனது நட்பு வட்டத்தின் மூலம் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைக்க, அதன் பின்னர் அந்த பெண், நடிகருக்கு பெண் தோழியாக அதுவும் நெருக்கமான தோழியாக மாறி விட்டாராம். நடிகர் தனது நிலையைச் சொல்லி புலம்ப அந்த பெண் தோழியோ ஆறுதல் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை விட்டு பிரிவதாக முடிவெடுத்த அவர் விவாகரத்து பெற முடிவு எடுத்து விட்டாராம். இதனால் மனைவியை கடுப்பாக்க தனது தோழியுடன் அடிக்கடி வெளியே சுற்றி வருகிறாராம். நடிகரின் இந்த செயலால் மனைவி செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X