காமெடி நடிகரின் ஆக்‌ஷன் வெற்றி.. பாசிட்டிவ் விமர்சனங்களைக் கேட்டு கடுப்பான மற்றொரு நடிகர்!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை மட்டும் இல்லாமல், மிகப்பெரிய நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளார். இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கு ஷாக் தான். அதுவும் வாரிசு நடிகர்களுக்கு சொல்லவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவரது வெற்றி உயர்ந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கும்போது நடிகரின் படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைக் கேட்ட நடிகர் ஒருவர் செம கடுப்பில் இருக்கிறாராம்.

அதாவது இந்த நடிகரின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்லது நினைத்தவர்தான் அந்த நடிகர். ஆனால் அந்த நடிகருக்கு இருந்த எண்ணம் என்னவாக இருந்துள்ளது என்றால், இளம் நடிகர் எப்போதும் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தாராம். அதுவும் கதை கேட்கும்போது கூட தனது ஒப்புதலை வாங்கிவிட்டுத்தான் கதை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

இது தெரியாமல் இளம் நடிகர் அந்த நடிகரை நம்பிக் கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த நடிகர் பார்த்த சில உள்ளடி வேலைகளை அந்த இளம் நடிகர் கண்டுபிடித்த பின்னர், செம அப்செட் ஆகியுள்ளார். ஆனால் அது குறித்து எதுவும் கேட்கவில்லையாம். அதன் பின்னர் ஒரு நாள் அந்த நடிகரோ இளம் நடிகரிடம் ரொம்பவும் நல்லவன் போல பேசுகையில் இளம் நடிகருக்கு இருந்த கோபம் வெளிப்பட்டு கண்டபடி திட்டியுள்ளார். இதனால் அந்த நடிகருக்கும் இளம் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்னை என்பது இருவருக்கும் இடையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

Tamil Cinema Gossip Actor Who Got Very Angry After Comedy Actor Action Movie Received Positive Reviews

நல்ல வரவேற்பு: அந்த நடிகரை விட்டு விலகிய பின்னர் அந்த இளம் நடிகருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வர, நடிகரோ வளர்ந்து கொண்டே இருக்கிறார். இந்நிலையில்தான் இந்த இளம் நடிகரின் படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலில் அந்த படத்திற்கு பெரிய அளவில் புரோமோசன் செய்யாததை பார்த்த நடிகரோ, படம் அதுவாகவே பிளாப் ஆகிடும் போல என்று யோசித்துள்ளார்.

செம அப்செட்: ஆனால் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெறவே, இப்போது அந்த நடிகர் செம அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் இந்த நடிகரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து அவர் முடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் அந்த நடிகர். இது தொடர்பாக தனது நெருங்கிய வட்டாரத்தில் எல்லாம் கூட சொல்லி இணையத்தில் பொய் பிரச்சாரம் செய்யச் சொல்லியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் இந்த நடிகரின் படம் வெற்றி பெற்று வருகிறது. இதனால் அந்த நடிகர் என்ன செய்வது என்று தெரியாமல் செம அப்செட்டில் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X