நடிகை பார்த்துவிட்ட வேலை.. அதுக்கு வரவே கூடாதுனு உத்தரவு போட்ட நடிகர்.. ச்சீ ச்சீ கேவலம்!

By Staff

சென்னை: இந்த நடிகருக்கு பெரிய பிசினஸ் இருக்கிறது. பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் தங்களுக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்துவிட்டால், அவர்களைப் பயன்படுத்தி எப்படி அரசியலில் வெற்றி கொடி நாட்டுவது என்று கணக்குப் போட்டு அதில் வெற்றி பெற்ற நடிகர்களும் நடிகைகளும் இருக்கிறார்கள். தோல்வியைத் தழுவி அரசியல் ஆற்றில் கரை காண முடியாதவர்களையும் தமிழ்நாடு பார்த்துள்ளது.

இப்படி இருக்கையில் மாஸ் நடிகர் தனது ரசிகர் பலத்தை பயன்படுத்தி முதலமைச்சர் சீட்டுக்கு காய்களை நகர்த்தி வருகிறார். களத்தில் அவருக்கு அனுபவம் பத்தாது, இவரை விட வில்லாதி வில்லன்களைப் பார்த்த மன்னாதி மன்னன்கள் நாங்கள் என்று ஆளும் தரப்பு ஒரு கை பார்த்துவிட தயாராக இருக்கிறது. நடிகரோ சினிமாவில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கிக் கொள்கிறேன். இனி மக்கள் பணி தான் தனது ஒரே கொள்கை. மூச்சுள்ள வரை அரசியல் களம் தான் என்று அறிக்கை எல்லாம் வெளியிட்டார்.

Tamil Cinema Gossip Actor Who Insist To Production Team to Avoid Co-Actress For Promotion

நடிகரின் பிளான்: இப்படி இருக்கையில் அவரது கடைசி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புரோமோசன்களை படக்குழு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம், இதற்காக நாம் போய் ஆளும் தரப்பிடம் நிற்க வேண்டாம் என நடிகர் யோசித்தாரோ என்னவோ, இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்தச் சொல்லி உள்ளார் நடிகர். நடிகர் இதுதான் தனது கடைசி படம் என்று சொல்லி விட்டதால் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடம் ஒரு கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாவது நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.

நடிகை பார்த்துவிட்ட வேலை: இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகள் நடிகருக்கு சாதகமாக வரவில்லை என்றால் அவர் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்ற பேச்சு ஓடிக்கொண்டு இருக்க, அதற்கு ஏற்ற வகையில் அவருடைய கடைசி படத்தில் நடித்த நடிகை, தான் அந்த நடிகரிடம் பேசும்போது, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து எனது முடிவில் மாற்றம் இருக்கும் என்று கூறியதாக கூறினார். நடிகர் பர்சனலாக சொன்ன விஷயத்தை பொது வெளியில் போட்டு உடைத்ததால் நடிகர் செம கோபத்தில் இருக்கிறாராம்.

நடிகர் போட்ட உத்தரவு: இதனால் அந்த நடிகையை படத்தின் புரோமோசன்களில் பார்க்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. நம்பிக்கையுடன் நடிகர் சொன்ன விஷயத்தை பொதுவெளியில் உடைத்தது நடிகையின் தவறு, எனவே நடிகைக்கு இது சரியான தண்டனைதான் என்று பலரும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் அவ்வளவு உயரத்தில் நடிகர் நடிகையை மன்னித்துவிடலாம் என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X