அடக்கவே முடியலயாம்.. நடிகையை தனிமையில் சந்திக்க.. ஹோட்டல் பின் வாசல் வழியாகச் சென்ற நடிகர்..

By Staff

சென்னை: இவர்கள் கதை ஊர் அறிந்த கதைதான் என்றாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருக்கிறார்கள். குறிப்பாக இருவரும் ஆரம்ப காலத்தில் இணைந்து படங்களில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதுபோன்ற கதை பல இங்கு நடந்துள்ளது. இதில் அவர்கள் விஷயம் என்னவென்றால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது தான்.

இருவரும் அக்கட தேசத்தில் செம பேமஸ். படங்களில் சேர்ந்து நடித்த போது ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, படப்பிடிப்பு தளத்தை கடந்தும் தொடர்ந்துள்ளது. இருவரும் பேசிப் பழகி பார்த்துள்ளார்கள். இருவருக்கும் ஒத்துப் போனது. இப்போது காந்தமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் உள்ளார்கள். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், டேட்டிங் போகிறார்கள், இருவரும் அடிக்கடி மீட் செய்து கொள்கிறார்கள் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இவர்கள் இருவரும் இந்த விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என முடிவு எடுத்துள்ளார்களாம்.

வடிவேல் காமெடியைப் போல மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்து இருவரும் சுற்றி வருகிறார்கள். நடிகை, இப்போது ஆல் இந்தியா பர்மிட் வைத்துள்ள நடிகையாக மாறிவிட்டார். செம பிஸியான நடிகை. இதில் நடிகர் அவ்வப்போது மீட்டிங் டேட்டிங் என எதாவது பிளான் போட்டு நடிகைக்கு தனது டச்சைக் கொடுத்து வருகிறாராம். நடிகரின் இந்த அடக்க முடியாத காதலால், இருவரும் அவ்வப்போது மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டிக் கொண்ட பின்னரும் இருவரும் தனித்தனியே செல்வது போலவும் வருவது போலவும் சீன் போட்டு வருகிறார்களாம்.

Tamil Cinema Gossip Actor Who Meets his Lover On Star Hotel Back Door

ஹோட்டல்: அப்படியான சம்பவம் ஒன்று தான் சமீபத்தில் நடந்துள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற ஹோட்டலில் இருவரும் மீட் செய்ய பிளான் போட்டுள்ளார்கள். இதில் நடிகை முதலில் ஹோட்டலுக்கு வந்துள்ளார். நடிகை ஹோட்டலுக்கு வந்ததும், பலருக்கும் இருந்த கேள்வி, நடிகை புதிதாக ஏதாவது படத்தில் கமிட் ஆகி உள்ளாரா என்ற கேள்விதான். நடிகை எப்போதும் போல முன் வாசல் வழியாக ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

பின்வாசல்: ஆனால் நடிகர் தானும் முன் வாசல் வழியாகச் சென்றால் சிக்கி விடுவோம் என ரொம்பவும் புத்திசாலியாக யோசித்து, ஹோட்டல் பின் வாசல் வழியாக சென்றுள்ளார். நடிகர் பின் வாசல் வழியாகச் சென்றதை பார்த்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து உள்ளார்கள். பாவம் இந்த நடிகர் தனது காதலையும் காதலியையும் காப்பாற்ற ரொம்பவும் சிரமப்படுகிறாராம். காதலை கட்டுப்படுத்த முடியாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X