மனைவி கொடுத்த கும்மாங்குத்து.. அந்த விஷயத்தில் மட்டும் நடிகர் தலையிடுவதே இல்லையாம்!
சென்னை: இந்த நடிகர் ஜூனியர் நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்தவர். இன்றைக்கு நடிகருக்கு இந்தியா முழுவதும் ஒரு கவனிப்பு இருக்கத்தான் செய்கிறது. மிகவும் லேட்டாகவே அவரது சினிமா பயணம் தொடங்கினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் நடிகர் வெற்றிப் படங்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும் வாங்கிவிட்டார். இப்படி இருக்கும்போது நடிகருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் வந்த பிரச்னையால் இப்போது எல்லாம் நடிகர் அடக்கி வாசிக்கிறாராம்.
அதாவது நடிகர் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார். இவர் சினிமாவில் பெரிய அளவில் ஸ்டாராக மாறுவதற்கு முன்னரே அவருக்கு திருமணம் எல்லாம் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது நடிகர் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய ஸ்டாராக மாறிய பின்னர் அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட பழக்கத்தைக் கடந்து ரகசிய உறவாக மாறி உள்ளது. இந்த ரகசிய உறவை சில ஆண்டுகள் தனது மனைவிக்குத் தெரியாமல் பார்த்து வந்துள்ளார் நடிகர்.

நடிகரின் ரகசிய உறவு: இதனால் அடிக்கடி வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளார். வீட்டுக்கு அருகில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் வீட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளார். இப்படி இருக்கையில் நடிகரின் மனைவி தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகி நடிகரின் நடவடிக்கைகளை கவனிக்கச் சொல்லி உள்ளார். இப்படி இருக்கும்போதுதான் நடிகருக்கும் நடிகைக்கும் இருக்கும் உறவு குறித்து நடிகரின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நடிகரின் மனைவி, நடிகர் வீட்டுக்கு வந்த பின்னர் நடிகரை கேள்விகள் கேட்டு பெரிய சண்டையே போட்டுள்ளார்.
நடிகர் எடுத்த முடிவு: முதலில் மறுத்த நடிகர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது மனைவியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த நடிகரின் மனைவி நடிகரைப் போட்டு அடி அடி என்று அடித்தாராம். அந்த சம்பவத்திற்குப் பிறகு நடிகர் பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது தான் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தின் நடிகை தேர்வில் மட்டும் அவர் தலையிட மாட்டேன் என்று தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீது சத்தியம் செய்துவிட்டாராம். அன்றிலிருந்து நடிகர் தனது படங்களில் கமிட் ஆவதும், சம்பளத்தை வாங்குவதும் நடிப்பதும் டப்பிங் முடிப்பதும் என இப்படித்தான் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











