அந்த விலைக்கு அவர் படம் போனி ஆகாது.. நடிகரை தவிர்க்கும் தயாரிப்பாளர்கள்.. ரொம்ப பாவம்ப்பா!

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். தனக்கென எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தமிழ் சினிமாவில் கால் வைத்து, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளார். இப்படி இருக்கும்போது அவரது பல படங்கள் அதிரிபுதிரியான வெற்றிகளைக் குவித்துள்ளது. ஆனால் இன்றைக்கு அவரது அடுத்த படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர் இல்லையே என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது நடிகர் தற்போது சினிமாவில் மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த மற்றொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் வெற்றிகளைக் குவித்து பதக்கங்களை வென்று வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகர் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார். ஆனால் அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரமாட்டேன் என்கிறார்களாம்.

Tamil Cinema Gossip Actor Who Not Ready To Reduce His Salary After His Continue Failure

சம்பளம் தான் பிரச்னை: அதற்கு மிகவும் முக்கியமான காரணமாக சொல்லுவது நடிகரின் சம்பள கிராக்கிதானாம். அதாவது நடிகர் தனது சம்பளத்தை ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அவரது படங்கள் அந்த அளவுக்கு வியாபரம் ஆவதே இல்லை. இப்படி இருக்கையில் நடிகர் ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளம் கேட்பது நியாயமாகப் படவில்லை. வேண்டுமானால் ரூபாய் 100 கோடிகள் சம்பளம் தரத் தயாராக இருக்கிறோம். அதற்கு அவர் ஓ.கே. என்றால், சொல்லுங்கள் வேலைகளை ஆரம்பித்துவிடலாம் என்று தெளிவாகச் சொல்லி உள்ளார்கள்.

விட்டுக் கொடுக்காத நடிகர்: ஆனால் அந்த நடிகரோ, தனக்கு தொழில் ரீதியான போட்டி நடிகராக இருக்கும், அவரது சம்பளத்துக்கு இணையாக சம்பளம் வாங்க வேண்டும் என்ற, மனநிலையில் தனது சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று கறார் காட்டுகிறாராம். இப்படி இருக்கும்போது நடிகரின் மேனேஜரோ, பல தயாரிப்பாளர்களின் அலுவலகங்கள் என அனைத்தையும் சென்று பார்க்கிறாராம். ஆனால் எல்லோரும் மரியாதையாக உபசரித்து அனுப்பிவிடுகிறார்களாம். ஆனால் நடிகரின் கன்டிஷனுக்கு ஒத்து வரமாட்டேன் என்கிறார்களாம். இதனால் நடிகரும் அவரது குழுவினரும் மிகவும் கவலையாக இருக்கிறார்களாம். நடிகர் தனது முடிவில் கொஞ்சம் கூட இறங்கி வராமல் இருப்பது தான் இந்த நிலைக்கு காரணம் என்ற பேச்சுதான் தற்போது பேச்சாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X