மனைவியை விட்டுட்டு வாங்க.. உங்களுக்காக நான் இருக்கேன்.. நடிகரை வளைத்துப்போட நடிகை தீவிரம்!

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்து வந்த காலகட்டத்தில் அந்த நடிகருக்கு ஜோடியாக நடித்தார் அந்த நடிகை. அப்போதே அந்த நடிகர் மீது நடிகைக்கு கொஞ்சம், இண்ட்ரஸ்ட் ஏற்பட்டுள்ளது. ஆனால் நடிகருக்கு திருமணம் ஆகியிருக்காது என நடிகை நினைத்துக் கொண்டு நடிகரிடம் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் நடிகரின் மனைவிக்கு தெரியவர, நடிகருக்கு ரெய்டு விட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் அமைதியாக இருக்க, இப்போது மீண்டும் நெருக்கம் காட்டி வருகின்றார்களாம்.

நடிகரும் நடிகையும் முதலில் படப்பிடிப்புத் தளங்களில் மட்டும் தான் சந்தித்து வந்து கொண்டு இருந்துள்ளார்கள். போகப் போக இருவருக்கும் இடையிலான பழக்கம் நெருக்கம் ஆகிக் கொண்டே போக, லஞ்ச், ஈவினிங் காபி, நைட் டின்னர், லேட் நைட் பார்ட்டி என இவர்களின் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்துள்ளது. இவர்களின் நெருக்கம், பல நாட்களில் படப்பிடிப்பினையே ரத்து செய்யும் அளவுக்கு போயுள்ளதாம்.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

முதலில் இது தொடர்பாக கேள்விப்பட்ட நடிகரின் மனைவி, சும்மா அடித்து விடுகின்றார்கள். என் புருஷன் உத்தமன் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். பல நாட்களில் வீடு இருக்கும் நகரத்திலேயே படப்பிடிப்புகள் நடைபெற்றாலும், சூட்டிங் முடிந்து வீட்டுக்கு நடிகர், வர தாமதமாக வருவது, போதையில் வருவது, மனைவியுடன் சண்டை, பல நாட்களில் வீட்டுக்கே வராமல் இருப்பது என நடிகை விரித்த வலையில் நடிகர் சிக்கிக் கொண்டார்.

மிரட்டல்: நடிகரும் ஆரம்பத்தில் தனது திருமணத்தை மறைத்து வந்துள்ளார். கொஞ்சம் நெருக்கம் அதிகரித்த பின்னரே, திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில், இருவருக்கும் நெருக்கம் எக்கச்சக்கமாக ஏற்பட்டுவிட்டதாம். உத்தம புருசனின் நடவடிக்கைகள் குறித்து, தெரிந்து கொண்ட நடிகரின் மனைவி, அதிர்ச்சி அடைந்து, நடிகருடன் தாறுமாறாக திட்டியுள்ளார். மேலும் போலீஸ்க்கு போய், மானத்தையே வாங்கிவிடுவேன், ஒழுக்கமாக இரு என மிரட்டிவிட்ட பின்னர்தான் நடிகர் கொஞ்ச காலம் அடக்கி வாசித்துள்ளார்.

விவாகரத்து: ஆனால் இப்போது திரையுலகில் விவாகரத்துகள் அதிகரித்துவிட்டதால், நடிகை, நடிகரைத் தொடர்புகொண்டு, சூட்டோடு சூடாக நீங்களும் விவாகரத்தை அறிவித்துவிடுங்கள் என்றுக் கூறியுள்ளாராம். ஆனால் நடிகர் அறிவிப்பதற்கு முன்னர் மக்களது கவனம் வேறு விஷயத்தில் திரும்பிவிட்டதால், இப்போது சொன்னால், நாரடித்து விடுவார்கள். எனவே கொஞ்ச காலத்திற்கு ஆறப்போடலாம் எனத் தெரிவித்துள்ளாராம். இப்படியான நிலையில் நடிகர், நடிகையை தனிமையில் சந்திப்பதை இப்போது ஆரம்பித்துவிட்டாராம்.

அதிர்ச்சி: டின்னர், லேட் நைட் பார்ட்டி, வீக் எண்ட் அவுட்டிங் என இருவரும் செம ஜாலியாக இருக்கின்றார்களாம். நடிகரைத் திருமணம் செய்து கொள்ளவே, நடிகை இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலே உள்ளாராம். எப்படிப் பார்த்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என நடிகை நெருங்கிய வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றார்களாம். இது எல்லாம் எங்க போய் முடியுமோ என விவரம் தெரிந்தவர்கள், இவரா இப்படி என அதிர்ச்சியோடு கேட்டு வருகின்றார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X