தங்கச்சி கேரக்டருக்கு கூப்பிட்டுவிட்டு கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச்சொன்ன நடிகர்.. மிரட்டி விட்ட நடிகை!
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் நடிகையாகவும் துணை நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். நடிக்க நல்ல கதாபாத்திரம் என்றால் அந்த கதாபாத்திரத்தை மிஸ் செய்யவே மாட்டார் இவர். ஆனால் இப்படியான நடிகையை நடிகர் ஒருவர் தங்கச்சி கேரக்டருக்கு நடிக்க கூப்பிட்டுவிட்டு அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவிலேயே இந்த நடிகை நல்ல பெயர் வாங்கிய நடிகை. இந்த நடிகை அடைந்துள்ள உச்சத்துக்கு இவருக்கு எல்லாம் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இப்போது இருக்காது என பலரும் நினைக்கும் அளவுக்கு நடிகை உயர்ந்துள்ளார். ஆனால் இந்த நடிகை தனது ஆரம்ப காலத்தில் வளர்ந்து வரும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரது அட்ஜெஸ்மெண்ட் பிரச்னையை எதிர் கொண்டுள்ளார். ஒரு இயக்குநர் எல்லாம் படப்பிடிப்பு நடக்க நடக்கவே பேக்-அப் சொல்லிவிட்டு நடிகையை தனது கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்துச் சென்றுவிடுவாராம். வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு என்றால், தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுவிடுவாராம்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: நடிகை இவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், மக்கள் மத்தியில் இருந்தும் ரசிகர்கள் மத்தியில் இருந்தும் நல்ல நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்ததால், இதுதான் சினிமாவின் நிலை என ஆரம்பத்தில் நினைத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அட்ஜெஸ்மெண்ட்க்கு நடிகை முடியாது எனக் கூறும் இடத்திற்கு வந்துள்ளார். இப்படியான நிலையில்தான் வாரிசு நடிகர் ஒருவர் இந்த நடிகையுடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டி இருந்துள்ளது. நடிகையும் அந்த வாரிசு நடிகருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால், சரி எனக் கூறிவிட்டார்.
கெஸ்ட் ஹவுஸ்: இப்படி இருக்கும்போது, படத்தில் நடிகை தனக்கு தங்கை கதாபாத்திரத்திற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதால், நடிகர் தானாகவே நடிகைக்கு போன் செய்து, பேசியுள்ளார். இது மட்டும் இல்லாமல் நடிகையை தனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து விட்டு போங்களேன் என அழைப்பும் விடுத்துள்ளார். இதைக் கேட்ட நடிகைக்கு செம ஷாக் ஏற்பட்டுள்ளது. வாரிசு நடிகர் இப்படி கேட்பார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். உடனே இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் போன் போட்டு காட்டு கத்து கத்தியுள்ளார் நடிகை. மேலும் இந்த படத்தில் இருந்து இந்த நடிகரை நீக்கினால் தான் நடிப்பதாகவும், இல்லை என்றால் வேறு யாராவது பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். நடிகை ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், வாரிசு நடிகரை மாற்றிவிட்டு வேறு ஒரு வாரிசு நடிகரை கமிட் செய்துள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











