இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை.. பதிலடி கொடுத்தே தீருவேன்னு சபதம் எடுத்த டாப் நடிகர்!
சென்னை: இந்த இயக்குநர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறி நிற்கிறார். இது மட்டும் இல்லாமல், இந்த இயக்குநர் படத்தில் நடிக்க கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை நடிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படியான இயக்குநர் டாப் நடிகரிடம் சொன்ன ஒரு வார்த்தைக்கு, அந்த நடிகர் அந்த இயக்குநருக்கு பதிலடி கொடுத்தே தீருவேன்னு சபதம் எடுத்து இருக்கிறாராம்.
இந்த டாப் நடிகரும் அந்த இயக்குநரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்று தகவல்கள் லேசாக உலாவந்தபோதே பலருக்கும் இருந்த கேள்வி, ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் எப்படி இருக்க முடியும் என்பதுதான். காரணம், அந்த நடிகர் வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இருந்த மற்றொரு நடிகரின் தீவிரமான ரசிகர் தான் அந்த இயக்குநர்.
அந்த நடிகரின் தீவிர ரசிகர் நான் தான். அந்த இடத்த நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். தேவைப்பட்டால், சட்டையைக் கழட்டி வைத்துக் கொண்டு சண்டை செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தன்னுடைய எல்லா படத்திற்கு முன்னரும் அந்த நடிகரின் படத்தை பார்த்துவிட்டுத்தான் படப்பிடிப்புக்கே செல்வாராம் அந்த இயக்குநர்.

சந்தேகம்: இப்படியான இரண்டு பேர் ஒன்றாக இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்றால், யோசித்துப் பாருங்கள், ஏதாவது ஒரு இடத்தில் கூட, அந்த படத்தில் தனது அபிமான நடிகர் ஒரு காட்சி இருக்கும் அல்லவா, அதுபோல நடித்தால் போதும் என படப்பிடிப்புத் தளத்தில் கூறிவிட்டாலே முடிந்தது, அந்த படம் அடுத்து நகருமா என்பது சந்தேகம் தான் எனக் கூறும் அளவுக்கு முந்தைய கால வரலாறுகள் உள்ளது.
பதிலடி: இப்படியான நிலையில் நடிகர் தனது அடுத்த படத்தை இந்த இயக்குநரே இயக்கட்டும் என முடிவெடுத்து இயக்குநரை வரச் சொல்லி உள்ளார். இப்படி இருக்கும்போது வந்த இயக்குநரும் கதையைச் சொன்னோமோ ஓ.கே. செய்தோமா என இருக்காமல், போனதும் தனது அபிமான நடிகரின் புகழைப் பாடியுள்ளார். இதை டாப் நடிகர் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு, அந்த இயக்குநருடன் படமே நடித்து முடித்து விட்டார். இப்படி இருக்கும்போது, படத்தின் எல்லா வேலைகளும் முடிந்த பின்னர், அந்த இயக்குநரின் உதவி இயக்குநர்களை அழைத்து, உங்க இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்து விட்டு, அந்த நடிகரின் புராணத்தை பாடி கொண்டு இருந்தார், அவரை நான் வேற இடத்தில் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த இயக்குநரும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது போல திக் திக் மனநிலையில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











